7 Jul 2020

முத்திரைகள் உருவாக்கிய வரலாறு" நூல் வெளியீட்டு விழா

SHARE
(விஜய்)

கபே அமைப்பின் பணிப்பாளர் நிரோசன் பீரிஸினால் எழுதப்பட்ட "முத்திரைகள் உருவாக்கிய வரலாறு" நூல் வெளியீட்டு விழா கொழும்பில் உள்ள இராஜகிரிய தலைமைக்காரியாலயத்தில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தலைமையில்  திங்கட்கிழமை(6)காலை 10.00 மணியளவில்  நடைபெற்றது.


இந்நிகழ்வில் கபே அமைப்பின் தேசிய நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன்,கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அம்மணி சுறங்கி,கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசமானி மீராஸாகிப் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

முத்திரை உருவாக்கிய வரலாறு எனும் நூலில் முத்திரை ஏன் வெளியீட்டு வைக்கப்படுகின்றது? முத்திரை வெளியீட்டில் உள்ள பின்னனிகள்,முத்திரை யார் வெளியிட முடியும்,இதுவரையும் எத்தனை முத்திரைகள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: