22 Jul 2020

தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் த.தே.கூ வேட்பாளர் எம். உதயகுமார்.

SHARE
தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் த.தே.கூ வேட்பாளர் எம். உதயகுமார்.
தமிழ் மக்களின் இருப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைத்தான் மேலும் பலப்படுத்த வேண்டும் என அக்கட்சி சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புற நகர்ப் பகுதியில் புதன்கிழமை (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து அம்மக்களின் இருப்பினை பாதுகாத்து வருகின்ற ஒரேயொரு கட்சி தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் பல தமிழ் கட்சிகள்; போட்டியிட்டாலும் என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்  தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்துமே பேரினவாத கட்சிகளின் பங்காளி அல்லது ஆதரவுக் கட்சிகளாகவேதான் களமிறங்கியுள்ளன என்று தெரிவித்த உதயகுமார்,

இது தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடிப்பதற்கான பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்பதையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதுள்ள அரச கட்சியானது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது என்று அரசைச் சாடிய உதயகுமார், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அமோக ஆதரவுடன் பகிரங்கமாக எதிர்க்குசும் என்றும் அவர் சூளுரைத்தார்.

த.தே.கூட்டமைப்பினை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என பல சூழ்ச்சிகளை இலங்கைப் பேரினவாத  அரசு மேற்கொண்டாலும் அவை பயனளிக்கவில்லை என்று கூறிய உதயகுமார் என்னதான் பிராயத்தனங்களைச் செய்தாலும் தமிழ் மக்களிடம் இருந்து த.தே.கூட்டமைப்பினை யாராலும் பிரிக்கவே முடியாது என்றும் ஆக்ரோஷம் அவர்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க த.தே. கூட்டமைப்பு தொடர்ந்தும் போராடும் என அவர் உறுதியளித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: