14 Jun 2020

சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலைப் இயந்திர இயக்குனர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து வைப்பு.

SHARE
சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலைப் இயந்திர இயக்குனர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து வைப்பு.
ஏறாவூர் - ஐயங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆடை ஏற்றுமதித் தொழிற்சாலையில் இயந்திர இயக்குனர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

பிரபலமான ஒருங்கிணைந்த லூத்தாஹ் ஹோல்டிங்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தினரால் (டுழழவயா ர்ழடனiபெ Pஎவ டுவன)  இந்த ஏற்றுமதி ஆடைத் தொழிற்சாலை இயக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை 12.06.2020 மாலை இடம்பெற்ற இந்த ஆடைத் தொழிற்சாலைக்கு வருகை தந்த தொழிலதிபரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழுவினர் அங்கு இடம்பெறும் இயந்திர இயக்குனர் பயிற்சிகளைப் பார்வையிட்டனர்.

இந்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகள் நேரடியாக சர்வதேச தரத்திலான தொழில் நியமங்களுடன் தொழில் வாய்ப்பைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர இயக்குனர்களுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றதும் வெகு விரைவில் இத்தொழிற்சாலை தனது உற்பத்திகளை ஆரம்பிக்கும் முகமாக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சரும் தொழிலதிபருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த லூத்தாஹ் ஹோல்டிங்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலதிபரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட், சர்வதேச ஆடை தொழிற்துறை நிபுணர்கள், அதன் பணிப்பாளர் எஸ்.எஸ்.எம். அஸாம், உற்பத்திப் பிரிவு முகாமையாளர் வத்தேகெதர மில்ரோய், மனித வள அபிவிருத்திப் பிரிவு அதிகாரி எம். றெஜீனா, முகாமைத்துவ அதிகாரி அனிஸ்டஸ் ஜெயராஜ், தொழினுட்ப உத்தியோகத்தர் இந்திக ராமநாயக்க, ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தலைவர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: