16 Jun 2020

ஜனாதிபதியின் சுபீட்ச நோக்கில் மட்டக்களப்பில் வீடுகள் கையளிப்பு.

SHARE
ஜனாதிபதியின் சுபீட்ச நோக்கில் மட்டக்களப்பில் வீடுகள் கையளிப்பு. ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்சவின் நாட்டைக் கட்யெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிறைந்துரைச் சேனையில் நிறுவப்பட்டுள்ள தலா ஆறு அரை இலட்சம் ரூபா பெறுமதியான புதிய இரு வீடுகள் இன்று (16) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவின் பிறைந்துரைச் சேனைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் திறப்பு விழா இப் பிரதேச செயலாளர் எம்.சி.எம். முசம்மில் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைத்து வறுமைக் குடும்பம் ஒன்றிடம் புதியவீடு கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திறந்து வைத்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிக்கு கையளிக்கப்பட்டதாக மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் வீ.ஜெகநாதன், உதவி பிரதேச செயலாளர்களான அப்கர் அஹமட், எம்.ஏ.சி. றமீசா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத், வீடமைப்புத் தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.எல். நதீர், பிறைந்துரைச்சேனை வீடமைப்புத் திட்டத்தின் தலைவர் ஏ. றபீற், செயலாளர் எம். ஜெய்னுதீன் உட்பட பல அரச அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இங்கு கருத்து வழங்குகையில் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட இந்த இலவச வீட்டுத்திட்டத்தை முழுமைப் படுத்த உதவி செய்த பிரதேச நலன் விரும்பிகள் மற்றும் இவ்வீடுகளை நிர்மாணிக்க பங்களிப்பு செய்த பிரதேச செயலாளர்கள் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களுக்கும் மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்கு இந்த இலவச வீட்டுத்திட்டத்தை நிர்மாணிக்க முன்வந்த அரசாங்கத்தின் பணிகள் வரவேற்கத்தக்கது. இத் திட்டம் எதிர் காலத்திலும் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.  








SHARE

Author: verified_user

0 Comments: