27 Jun 2020

அம்பாறை மாவட்டத்தின் விவசாயிகள் வெள்ளத்தினால்

SHARE
அம்பாறை மாவட்டத்தின் விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டு முகத்துவாரம் ஆற்றுவாயினை வெட்டிவிடுமாறு கொரிக்கை முன்வைத்தனர்.

கரவாகுப்பற்று நற்பட்டிமுனை மற்றும் கிட்டங்கி நாவிதன்வெளி விவசாயிகளின் தாழ்நில் விவசாயகாணிகள் முழுமையாக வெள்ளத்தினால் கிட்டத்தட்ட (5000) ஐயாயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டனர் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பேசியதன் அடிப்படையில் சனிக்கிழமை (27) ஆற்றுவாய் வெட்டும் தீர்மாணிக்கும் மாவட்ட செயலணி அவசரமாக கூட்டி தீர்மானம் எடுக்க வேண்டிய தேவையின் அடிப்படையில் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.


இவ்வாறானதொரு செயற்பாடு கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்று எமது மாவட்டம் கடும் வரட்சியை எதிர்கொண்டு குடிநீர் முழுமையாக மக்களுக்கு வழங்கமுடியாத நிலை ஒன்று ஏற்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது.

நீர் வடிந்தொடுவதற்கான சாத்தியங்கள் மகவும் குறைவாக கானப்படுவது துறைசார் திணைக்களத் தலைவர்கள் இங்கு குறிப்பிட்டிருந்தனர் இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் திருமதி வண்ணியசிங்கம் கலைவாணி குறிப்பிடுகையில் சாதாரனமாக 112 மில்லி மிற்றர் நீர் நிரம்பியதன் பின்னர்தான வெட்டுவது தொடர்பில் ஆராயப்படும் தற்போது 40 மில்லி மிற்றர் இருப்பதனால் அவசியம் இல்லை என குறிப்பிட்டார். 

மேலும் 9 பிரதேச பிரிவுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலை உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம் சியத் இதன்போது குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டவேண்டிய தேவைப்பாடு எமது மாவட்டத்திற்கு இல்லை என்றும் வெட்டுவதால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் வாவி மீனவர் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதாலும் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் ஆகலாம் என்பதாலும் ஆற்றுவாய் வெட்டிவிடுவது சாத்திமில்லை என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் மத்திய நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.அசார், மாகாண நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.இராஜகோபாலசிங்கம், கமநல திணைக்கள் உதவி ஆணையாளர் கே.ஜெகநாத்,  மற்றும் மாநகர உதவி ஆணையாளர் உ.சிவராஜா,மீன் பிடித்திணக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: