19 Jun 2020

இயற்கையின் மாற்றத்தால் உலகில் வெப்பநிலை அதிகரித்துள்ளது – உதவித்திட்டப் பணிப்பாளர் குணரெத்தினம்.

SHARE
இயற்கையின் மாற்றத்தால் உலகில் வெப்பநிலை அதிகரித்துள்ளது – உதவித்திட்டப் பணிப்பாளர் குணரெத்தினம்.
தற்போதைய நிலையில் மழை பெய்யும் காலத்தில் மழை கிடைப்பதில்லை, வெயில் காலத்தில் சிலவேளைகளில் மழை பெய்கின்றது. உலகளாவிய ரீதியில் இயற்கையின் மாற்றத்தால் வெப்பநிலை தற்போது அதிகரித்துள்ளது. என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டப் பணிப்பாளர் கே.குணரெத்தினம் தெரிவித்துள்ளார்.



சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் எனும் அமைப்பு வீட்டுத்தோட்டப் பயிற் செய்கையை ஊக்குவிப்பதற்காக கிராங்குளம் கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டங்களுக்குரிய பயிற் கன்றுகள், பயிர் விதைக்கள், சேதனை உரம் போன்றன வெள்ளிக்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது பிரதம அதிதியாக காலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

வெப்பநிலை அதிகதித்துள்ளதனால் சூழலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதனைச் சீர் செய்வதற்காக வேண்டி கொரோனா நோயின் பீதியினால் வாழ்வாதாரங்களை இழந்வர்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், இயற்கை வளங்களை பேணுவதற்காகவும், வீட்டுத் தோட்டங்களைப் பேணவும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் எனும் அமைப்பு முன்வந்து அவற்றை நடைமுறைப் படுத்துகின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடையமாகும். 

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சொகுசு வாழ்க்கை வாழ்வதனாலும் நாம் உட்கொள்ளும் உணவுகளில் நச்சுத்தன்மை இருப்பதனாலும், தற்போது மனிதர்கள் பலருக்கு ஏதோ ஒரு வகையில் தொற்றா நோய்கள் காணப்படுகின்றன. இதற்காக வேண்டி அரசாங்கமும், திவி நெகும திட்டத்தின் கீழ் அனைவரும் வீட்டுத் தோட்டங்கள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ளவதற்கு கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் மனிதர்களாகிய நம்பில் பலர் ஏதோ ஒரு வகையில் தொற்றா நோய்க்குட்படடுத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  

எனவே மக்கள் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கு இராசாயனப் பசளைகளையும், கிருமிநாசினிகளையும் பயன்படுத்தாமல், சேதனைப் பசளைகளையும். இயற்கைப் பசளைகளும், பயன்படுத்தி, உற்பத்திகளைச் செய்து தஙகளுடைய சுய தேவைகளையும் பூர்த்தி செய்து, மேலத்திகமானவற்றை விற்பனை செய்து வருமானத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மக்கள் சுய முயற்சியுடனனும், பூரண ஒத்துழைப்புக்களுடனும் செயற்பட வேண்டும். இதன்மூம் மக்கள் தற்களுடைய வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் கா.முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் அவ்வமைப்பின் நிருவாக உத்தியோகஸ்த்தர் ஐ.ஜெயசீலி, கிராம சேவை உத்தியோகஸ்த்தர். பூ.ரஜனி. விவசாய அபிவிருத்தி உத்தியயோகஸ்த்தர்களான வி.சுதாகரன், க.தாமோதரம்பிள்ளை, மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: