28 Jun 2020

திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை நேற்று 27ம் திகதி திருகோணமலை மின்சாரநிலைய வீதி திறந்து வைத்தது.

SHARE
(ராஜ்)

திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை நேற்று 27ம் திகதி திருகோணமலை மின்சாரநிலைய வீதி திறந்து வைத்தது.ஊடகத்துறை, இலக்கியத்துறை, சமூகசேவைகள் எனும் மூன்று பிரிவுகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் எழுத்தாணி கலைப்பேரவையின் அலுவலகம்த் திறப்புவிழாவில் அதிதிகளாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி. ஜீவிதன் சுகந்தினி திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் கோணேஸ்வரன் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் உற்பட மாவட்டத்தின் இலக்கியத்துறை சார்ந்த ஆர்வலர்கள் தன்னார்வ செயற்பாட்டளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் எழுத்தாணி கலைப் பேரவையின்  பொருளாளர் கவிஞரும் எழுத்தாளருமான அரசரெத்தினம் அச்சுதன் வரவேற்புரையினை நடாத்தினார்.

அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர்; வடமலை ராஜ்குமார் உரையாற்றும் போது
பின்வருமாறு அதரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கலைத்துறை சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் பல அமைப்புக்கள் உள்ள போதிலும் அவற்றின் செயற்பாடுகள் இன்னும் அதிகம் தேவையாகவுள்ளது. அவற்றை அதிகப்படுத்த  வேண்டும் என்ற ஒத்த சிந்தனையாளர்களின் முயற்சியே இவ்வமைப்பு எமக்கு அடுத்த சந்ததியான ஊடகத்துறையில் பயணிக்க சிறந்த தொழில் வாண்மையும் ஒழுக்க கோவையை பின்பற்றிக் கூடிய ஊடகவியலாளர்களை உருவாக்க எண்ணியுள்ளோம். அத்துடன் கிராம மட்டத்தில் உள்ள பாரம்பரிய கலை இலக்கியங்களை வெளிக்கொனருவதுடன் அவற்றை ஆவணப்பத்துதல்.

மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகனை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொனருதல் அதற்கான தளமாகவும், ஊடக மாநாடுகள் நடாத்தவும் இவ்அலுவலகம் எதிர்காலத்தில் செயற்படவுள்ளது.அச்செயற்பாட்டில் தங்களை இணைத்தக் கொள்ள வேண்டும் என எண்ணும் அணைவரும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும் அத்துடன் இந்த முயற்சியில் நீண்டதூரம் பயணிக்க அணைவரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என எழுத்தாணி கலைப்பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார் தனது உரையில் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: