20 May 2020

மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல்.

SHARE

மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல்.
மண்முனைப்பற்று கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (19) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மு. 11.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி..சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.

சுகாதார முறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்ற இக் கலந்துரையாடலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு..துமிந்தநளனசிறி, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி கே.ரமேஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலின் போது கொரோனா தொற்றிலிருந்து மண்முனைப்பற்று பிரதேச மக்களை எவ்வாராக தொடர்ந்தும் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாயல்களின் எவ்வாறாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும், டெங்கு நிலை தொடர்பில் பொது மக்களை எவ்வாறாக வழிநடத்த வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொரோனா சூழ்நிலையில் மக்களுக்காக பணியாற்றிவரும் இராணுவ உயரதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஏனைய திணைக்களகங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: