18 May 2020

சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையிலமைந்த ஊக்குவிப்பு உதவிகள்.

SHARE
சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையிலமைந்த ஊக்குவிப்பு உதவிகள்.
சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின் (Good Agriculture Practice - GAPழ் விவசாயிகளுக்கு இயற்கை முறையிலமைந்த ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக விவசாயப் போதனாசிரியை நிலக்ஷ‪p அன்ரனி தெரிவித்தார்.

ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் திங்கட்கிழமை 18.05.2020 இடம்பெற்ற இயற்கை முறையிலமைந்த பூச்சிப் பீடைத் தடுப்பு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், விவசாயத்தில் பீடைகளையும் பூச்சிகளையும் கிருமிகளையும் களைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் இரசாயனங்களைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிறந்த விவசாய நடைமுறைத் திட்டத்தின்  (Good Agriculture Practice - GAP)  விவசாயிகளுக்கு இந்த அனுகூலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது இரசாயனம் கலக்காத இயற்கையிலமைந்த உற்பத்திக்கே அதிகம் மவுசு என்பதையும் நாங்கள் விவசாயிகளுக்கு விழிப்பூட்டுகின்றோம்.

அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் இயற்கை வள பேணலுக்கும் உயிரின பன்மைத்துவத்திற்கும்இயற்கை விவசாயமே சிறந்தது என்பதைப் புரிய வைக்கின்றோம்.” என்றார்.

இந்நிகழ்வில் மரக்கறி, காய்கறி, பழச் செய்கையாளர்களுக்கு முன்னோட்டமாக பரீட்சித்துப் பார்க்கும் வகையில் இயற்கை முறையிலமைந்த பூச்சிப் பொறி, மஞ்சல் பொறி, உள்ளிட்டவை  வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன், விவசாயப் பயிலுநர் ஜே.ஜெனிஷா, அலுவலர் எம்.சி.எம்.றியாழ் ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: