25 May 2020

9ஏ எடுத்து வறுமையிலும் சாதித்த மாணவனுக்கு மடிக் கணணி வழங்கிவைப்பு.

SHARE
(எம்.எஸ்.ஜதா)   

9ஏ எடுத்து வறுமையிலும் சாதித்த மாணவனுக்கு மடிக் கணணி வழங்கிவைப்பு.
கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரிட்சையில் தோற்றி 9ஏ பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக் குட்பட்ட மட்.மமே.கன்னன்குடா மகாவித்தியாலய மாணவனுக்கு சந்திரசேகரம் சமூக நல அமைப்பினால் மடிக்கணணி வழங்கிவைக்கப்பட்டது.   

பிரத்தியேக வகுப்பு பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் கல்வி கற்று கடந்த 2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 9ஏ சித்தி பெற்று வறுமையிலும் சாதித்துக் காட்டிய கன்னன்குடா  பருத்திச்சேனையைச் சேர்ந்த சத்தியானந்தன் மிலக்சனுக்கே மடிக் கணணி வழங்கி வைக்கப்பட்டாது. 

குறித்த மாணவன் உயர் தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்க உள்ள நிலையில் அவரது கற்றலுக்கு உதவும் விதத்தில் மடிக் கணணி ஒன்றை வழங்குமாறு சமூக சேவையாளரும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியுமாகிய மாணிக்கப்போடி சசிகுமார்  மட்டக்களப்பு அமிர்தகழி சந்திரசேகரம் சமுக நல அமைப்பிடம் விடுத்த வேண்டுளை அடுத்தே பிராஞ்சில் வசிக்கும் நிதர்சினி குடும்பத்தினர் ஊடாகவே இவ் மடிக் கணணி சனிக்கிழமை மாணவனின் வீட்டுக்குச் சென்று மடிக் கணணி வாழங்கி வைக்கப்பட்டது.

இவ் மடிக் கணணியினை  மட்.மமே.கன்னன்குடா மகாவித்தியாலய அதிபர் தி.புலேந்திரகுமார், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மாணிக்கப்போடி சசிகுமார், சமாதான நீதவான் சி,கிருஸ்ணப்பிள்ளை, சமூக சேவையாளரும் ஆசிரியருமாகிய இ.குகநாதன், சமூக சேவையாளர் க,விமலநாதன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மு.அருணன், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவரும் இலங்கை இளைஞர் கழக சம்மேளன ஊடகத் துறை தலைவருமாகிய த.விமல்ராஜ் ஆகியோர் சென்று வழங்கிவைத்தனர். 

இதன் போது மாணவன் ச.மிலக்சன் தான் சிறந்த பெறுபெற்றை பெறுவதற்கு அயராது உழைத்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பிரதி அதிபர், பெற்றாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதனை அடுத்து தனது உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வியினை இலகுவாக கற்றுக் கொள்வதற்கு மடிக் கணணியினை வழங்கிய  சந்திரசேகரம் சமூக நல அமைப்பிற்கும் அதனை  பெற்றுத்தர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தான் அனைவாரது ஆசிர்வாதத்தோடும் கணிதத் துறையில் நல்ல நிலையை அடைவேன் எனவும் தெரிவித்தார்,






SHARE

Author: verified_user

0 Comments: