24 Apr 2020

குருதி சுத்திகரிப்பு பிரிவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஆரம்பிப்பு.

SHARE
(திலஸ்)

குருதி சுத்திகரிப்பு பிரிவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் ஆரம்பிப்பு.
சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு செயற்பாடு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…

இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரமானது கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வைத்தியசாலை கொடுக்கப்பட்டிருந்தாலும் அதனை இயக்குவதில் நீர்ப்பிரச்சினை சவாலாக இருந்து வந்துள்ளது. அங்கு இணைப்பில் உள்ள குழாய் நீரில் கிருமிகள் இருந்துள்ளமையால் இவ் இயந்திரத்தை இயக்க முடியாமல் போயுள்ளது. தற்போதுள்ள வைத்திய அத்தியட்சகரின் பாரிய முயற்சியினால் குறித்த பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டு குருதி சுத்தியரிப்பானது சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இங்கு இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளது. ஒரு நாளைக்கு ஆறு நோயாளிகள் தங்கள் குருதியினை சுத்திகரிப்பு செய்யலாம் எனவும், எமது வைத்தியசாலையை அண்டிய காத்தான்குடி, கல்முனை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் மட்டுமே இந்த சேவை நடைபெற்று வருகின்ற போதும் கூட காத்தான்குடி இயந்திரம் பழுதடைந்தமையால் ஏறாவூர், காத்தான்குடி சிகிச்கையயாளர்கள் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வருவதாகவும், இப்பிரதேச சிறுநீரக நோயாளர்கள் கல்முனை, காத்தான்குடி, மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த சுத்திகரிப்பு இயந்திரம் சேவையை ஆரம்பித்தமையானது எமது பிரதேச மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் வைத்தியசாலை அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: