23 Apr 2020

பெண் தலமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

SHARE
(ஜனா)

மட்டக்களப்பில் கைத்தறி நெசவு தொழிலினை ஜீவனோபயமாகக் கொண்டுள்ள பெண் தலமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் (23) இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் கணவனை இழந்த குடும்பங்களை மையப்படுத்தி  அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து பொதுச்சந்தை கட்டிடப் பகுதியில் இயங்கிவரும் ஆதித்தி கைத்தறி நிலையமானது தற்போது கொரொனா நோய் அச்சம் காரணமாக நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள   ஊரடங்கு சட்டத்தால் தொழில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது.


இதன்படி உலகவங்கியின் வரைபட நிபுணரும், ஆதித்தி நிறுவனத்தின் நிறுவுனருமான சுந்தரலிங்கம் சுதாகரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட கைத்தொழில் இணைப்பாளர் கீதா சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜன் சரவணபவன் கலந்துகொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: