29 Apr 2020

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானப் பணி கொரோனா சூழலிலும் தொடர்கின்றது.

SHARE
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானப் பணி கொரோனா சூழலிலும் தொடர்கின்றது.
இலங்கையில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் படிப்படியாக ஊரடங்குச் சட்டம்  சில மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுவந்தாலும் கூட அன்றாடத்தொழிலாளர்கள் உட்பட நிரந்தரவருமானமற்றவர்கள் தொழில் இன்மையால் அன்றாட உணவுச்செலவுகளைக்கூட ஈடுசெய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மாவட்ட மக்கள்படும் துன்பியல்களை கண்னுற்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு என்பன இணைந்து கொக்கட்டிச்சோலை உட்பட்ட மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு உலர்உணவுப்பொருட்களை இன்று (29) புதன்கிழமை வழங்கி வைத்துள்ளனர்.       

இவ்வாறாக உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவி அ,அமலநாயகி மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்துமாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் தமது அமைப்பிற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும்,  இம்மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவி எனும் அடிப்படையில் தனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்வதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் தலைவி அ,அமலநாயகி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: