16 Apr 2020

மகப்பேற்று வைத்திய நிபுணர். டாக்டர். சரவணன் அவர்களால் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி சுரவணையடியூற்றில்.

SHARE
(தவா) 

மகப்பேற்று வைத்திய நிபுணர். டாக்டர். சரவணன் அவர்களால் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி சுரவணையடியூற்றில்.
கோவிட் - 19  (கோரோனா) வைரஸ் தொற்று நோய் தாக்கத்தின் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கத்தின் பரவலை கட்டுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இப் புத்தாண்டு காலத்தில் அன்றாடம் நாளாந்த கூலிக்கு செல்லும் மக்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் மனிதநேயமுள்ள பல உறவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவழிகளில் உதவி வருகின்றனர். அந்தவகையில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனம்கண்டு அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு மகப்பேற்று வைத்திய நிபுணர். டாக்டர். சரவணன் அவர்களால் இரண்டாம் கட்டமாக  போரதீவுபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுரவனையடியூற்று கிராமத்தில் வாழும் 120 குடும்பங்களுக்கும் 1200 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். புத்தாண்டு காலத்தில் இது அம் மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக அமைத்தது.












SHARE

Author: verified_user

0 Comments: