17 Apr 2020

தொழில் பாதிப்புற்ற புகையிரத கடவை பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

SHARE
(ஜனா)

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அன்றாடம் தொழில்புரிந்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தொழில் பாதிப்புற்ற புகையிரத கடவை பாதுகாவலர்களின்  குடும்பங்களை கவனத்தில் கொண்டு மட்டக்களப்பு புளியந்தீவு வெற்றிகள் விளையாட்டுக் கழகத்தினால் இன்று (17.04.2020) உலருணவுப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டன.


மிகக் குறைந்த வேதனத்தில் கடமையாற்றிவரும்  புகையிரதக் கடவையாளர்கள் தமது மேலதிக நேரத்தில் பிரத்தியேக தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் தமது வாழ்வாதாரத்தினை முற்று முழுதாக இழந்து பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  மற்றும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பை சேர்ந்த  தனலெட்சுமி ரமேஷ் அவர்களின் நிதி உதவியில் புளியந்தீவு வெற்றிகள் விளையாட்டு கழகத்தின் ஊடாக மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரிலிருந்து பூனானை புகையிரத கடவை வரை பணியாற்றும் 72 கடவைப் பாதுகாப்பாளர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் வெற்றிகள் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். 






SHARE

Author: verified_user

0 Comments: