14 Apr 2020

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு

SHARE
(திலக்ஸ)

போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வம்மியடியூற்று கிராமத்தில் காணி ஒன்றினுள் கசிப்பு உற்பத்திக்கான கோடா கொள்கலன்கள் கிராம சேவையாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது…

கிராம மக்களிடம் இருந்து வம்மியடியூற்று கிராம சேவகர் அ.சிறிநாதனிற்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து செயற்பட்டு குறித்த காணியினுள் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான கோடா கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம சேவையாளர்களான அ.சிறிநாதன் மற்றும் திக்கோடை கிராம சேவையாளரான தி.தியதீஸ்வரன் ஆகியோரால் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது மட்டக்களப்பின் பல இடங்களில் இவ்வாறான கசிப்பு உற்பத்தி சட்ட விரோத செயற்பாடு அதிகரித்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 






SHARE

Author: verified_user

0 Comments: