13 Apr 2020

பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப்பணி கிரமமான முறையில் நடைபெறுகின்றன - அரசாங்க அதிபர்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரையும் அரசினாலும் தனியார் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் ஊடாகவும் தனிநபர்கள் மூலமாகவும் கிடைத்த நன்கொடைகள் அனைத்தும் மாவட்ட செயலகம் மூலம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப்பணி கிரமமான முறையில் நடைபெற்றுவருவதாக அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.அவ்வடிப்படையில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கையினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக பிரிவினரின் அவதானம் செலுத்தியிருந்தனர். அப்பிரதேச செயலாளர் நல்லையா. வில்வரெத்தினம் மற்றும் உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் தங்களின் அற்பணிப்பான சேவையினை வழங்கிவருகின்றமையினை அவதானிக்கமுடிந்தது.

செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட 39 கிராமசேவகர் பிரிவுகளிலும் இருபதினாயிரம் பேர் நிவாரண உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள். இவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் யாவும் பிரதேச செயலாளரின் கண்கானிப்பின்கீழ் பிரதேச செயலகத்தில் பொதிசெய்யப்பட்டு வருகின்றது. இவைகள் உரிய கிராமசேவகரின் ஊடாக கிராம மக்களுக்கு சமூக இடைவெளியினை பேனுகின்ற அடிப்படையில் வழங்கப்பட்டுவருகின்றது.

கடந்த சனிக்கிழமை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப்பொதிகளில் காலாவதியாக்கப்பட்ட அரிசி வழங்கப்பட்டதாக பொது சுகாதார அத்தியட்சகரினால் மக்களை பதற்றதிற்குள்ளாக்கிமை தொடர்பாக பிரதேச செயலாளரிடம் வினவியபோது அங்கு அரிசி காலவதியாகவில்லை  அரிசி பொதிசெய்யப்பட்ட பைகள் கொள்வனவு செய்யமுடியாத சூழலில் தன்னிடம் இருந்த பழைய பைய்களில் புதிய அரிசிகள் பொதிசெய்யப்பட்டு புத்தாண்டுக்கு முன்னர் அவசரமாக வினியோகிப்பதற்காக இவ்வாறு நடைபெற்றுள்ள விடையங்களை அனைத்தினையும் குறித்த ஊடகவியலாளருக்கும் அவருடைய ஊடக நிறுவனத்தின் செய்தி முகாமையாளர் அலுவலகத்துடன் தகவல் திணைக்கள அதிகாரி உரையாடியும் தொடர்புடைய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதா பரிசோதகர் ஆகியோரின் தொடர்புகளையும் ஏற்ப்படுத்தி உண்மையினை விழங்கவைத்தும் அந்த ஊடவியளாலர் வீதியில் நின்ற ஒருவரிடம் தரம் அற்ற அரிசியை உண்வுப்பொருட்களுடன் வழங்கிவருகின்றனர் என கூறுமாறு வேண்டியதற்கு அமைவாக கூறியதை தொலைக்காட்சி செய்தியில் பிரசுரிக்கப்பட்டமை கண்டிக்கவேண்டியது இவ்வாறான அனர்த்த காலங்களில் அற்பணிப்பான சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்கள் மிது சேறுபூசும் நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும் இவ்வாறான காலங்களில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என  அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: