19 Apr 2020

தொழில் ரீதியில் முற்றாக பாதிக்கப்பட்ட ஈரளக்குளம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.

SHARE
(காந்தன்) 

தொழில் ரீதியில் முற்றாக பாதிக்கப்பட்ட ஈரளக்குளம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.
கொரோனா தொற்றினை தொடர்ந்து நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் அதிகளவிலான குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளான நிலையில் உணவின்றி தவிக்கும் பரிதாப நிலையிலும் மக்கள் இருந்து வருகின்றனர்.

அதனடிப்படையில் செங்கலடி அக்கினி சமூக மேம்பாட்டு மன்றம் மற்றும் பீ.என்.ஏ பறவைகள் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள  ஈரளக்குளம் பகுதியை சேர்ந்த 34 குடும்பங்களிற்கு ஞாயிற்றுக்கிழமை (19) வழங்கி வைத்துள்ளனர்.

சுமார் 1000 ரூபாய்க்கு மேலான பெறுமதியினை கொண்ட இந்நிவாரணப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் பீ.என்.ஏ பறவைகள் விளையாட்டுக் கழக உறுப்பினர் ஆர்.ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தனர்.

இவ்வாறாக வறிய நிலையில் காணப்படும் கிராமங்களில் உள்ள தொழில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களிற்கு அரசினால் கொடுக்கப்படும் 5,000 ரூபாய் உட்பட வழங்கப்பட்ட நிவாரண உதவி உள்ளிட்டவை சுமார் ஒரு மாதங்களிற்கு மேலாக தொழில் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு போதுமானதாக இருக்காது எனும் அடிப்படையிலேயே இவ்உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டதாக அங்கு பிரசன்னமாகியிருந்த சமூக செயற்பாட்டாளர் சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: