2 Apr 2020

155 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு.

SHARE
(சபேஷ்)

155 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முகமாக அமுல்படுத்தபட்ட ஊரடங்குச் சட்டத்தினால் தமது வருமானங்களை இழந்த மக்களுக்கு உலருணவு மற்றும் அவசிய தேவைகளை வழங்கும் பணியினை சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனிடம் செங்கலடி கோலட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் பழையஊர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட 155 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.

பழையஊர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் நாகராசா லோகிதராசா தலைமையில் வியாழக்கிழமை (02) பழையஊர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் தி.சுதேஸ்கரன், பல்நோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் பா.கஜேந்திரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வீடு வீடாகச் சென்று உலருணவுப் பொதிகளை கையளித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: