12 Mar 2020

மட்டடக்களப்பு மாவட்டத்தின் மத்தியஸ்தர் சபையினரின் முன்னேற்ற ஆய்வுக் குழுக் கூட்டம்

SHARE
மட்டடக்களப்பு மாவட்டத்தின் மத்தியஸ்தர் சபையினரின் முன்னேற்ற ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று (12) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.மத்தியஸ்த சபையினரின் 14 மத்திய சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டு தங்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவர்களின் சேவைகள் பாராட்டப்பட்டதுடன் தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற பிணக்குகளை ஆராய்ந்து வருகின்ற பிணக்காளிகள் திருப்தி அடைகின்ற வகையில் தீர்வு வழங்கி வருவது குறிப்படத்தக்கது.

சனசமூக மத்திய சபைக்கு அனேகமாக நிதி சார்ந்த பிணக்குகளும் குடும்பப் பிணக்குகள் மற்றும் காணிசார் பிரச்சினைகளுமே அதிகளவாக எமது மாவட்டத்தில் பதிவாகி வருகின்றன. அதிலும் நிதிசார்ந்த பிணக்குகளே அதிகமாக பதிவாகி வருகின்றது.

மத்தியஸ்த சபைகள் சட்ட மூலமானது 1988ம் ஆண்டு 72ம் இலக்க சட்டத்தின் மூலமாகவே மத்தியஸ்த சபை கொண்டு வரப்பட்டது. தற்போது இலங்கை பூராகவும் மத்தியஸ்தர் சபையில் 8566 மத்தியஸ்தர்கள் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சன சமூக மத்தியஸ்தர் சபையில் 309 மத்தியஸ்தர்கள் கடமை புரிந்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் செயற்பட்டு வரும் விஷேட காணி மத்தியஸ்த சபைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற காணி மத்தியஸ்த சபையினரால் 63.5 வீதமான பிணக்குகள் தீர்த்து அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சனசமூக மத்தியஸ்தர் சபைக்கு 2019ம் ஆண்டு 5027 பிணக்குகள் கிடைக்கப் பெற்று அதில் 63.5 வீதமான பிணக்குகள் தீர்க்கப்பட்டு 30 வீதமான பிணக்குகளிற்கு தீர்வு காணப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் நிதி வர்த்தக மத்தியஸ்தர் சபையும் புலம் பெயர் தொழிலாளர்களின் பிணக்குகளை கையாளும் மத்தியஸ்தர் சபையும் மாவட்ட ரீதியில் அமைக்க அமைச்சரவையில் பத்திரம் தாக்குதல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மத்தியஸ்த சபையின் மாவட்ட பயிற்சி உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம். அஷாத், மத்திய சபையின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சாந்த தர்மினி விமலசந்துரு, மற்றும் மத்திய சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: