22 Mar 2020

மட்டக்களப்பில் ஊரடங்குச்சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றது

SHARE
(ஆனந்தன்)

மட்டக்களப்பில் ஊரடங்குச்சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாடளாவியரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டதை  அவதானிக்க முடிகின்றது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்ததும் அவதானிக்க முடிந்தது.

சுகாதார துறையினரும் மற்றும் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகாரிகளும் அத்துடன் ஊடகத்துறையினரும் உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் சகல வீதிகளும் வெறிச்சோடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எல்லா வீதிகளும் இரானுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் ஒரு சில மக்களின் நடமாட்டங்களையும் ஆங்காங்கு அவதானிக்க முடிந்துள்ளது.

வர்த்தக நிலையங்கள் ஏதுவும் திறக்கப்படாமையினால் அன்றாட கூலித்தொழிளாலிகள் சில அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள் இருந்தும் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றினை முற்றாக நாட்டில் இருந்து இல்லாமல் ஆக்குவதற்கு மக்களாகிய அனைவரும் இனைந்து செயல்படுவதன் மூலமேதான் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராலாம் என்பது உண்மையான விடையமாகும்.

உலக சுகாதாரஸ்தாபனம் இந்த வைரசானது தொற்றக்கூடியது எனவும் பொது இடங்களை தவிர்த்து கொன்டு சுயதனிமையுடனும் தங்களுடைய வீடுகளில் மக்கள் இருப்பதுடன் புகை பிடிப்பவர்களையும் அப்பளக்கத்தினை தவிர்த்து இருக்கும் படியும் வயதானவர்கள் சிறுவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை உண்ணும் படியும் வேண்டு கோள்விடுக்கின்றனர்.

மக்கள் முழு அவதானத்துடன் அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தலகளையும் சுகாதார திணைக்களத்தினரினன் ஆலோசனைகளையும் வைத்தியர்களின் அறிவுரைகளை மக்கள் கன்டிப்பாக கடைப்பிடிக்கும் சந்தர்ப்பங்களில் கொரோனாவை முற்றாக இல்லாது தடுக்க முடியும் எனலாம். 





SHARE

Author: verified_user

0 Comments: