16 Mar 2020

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால் உதவி

SHARE
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால்  உதவி
முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நால்வருக்கு திங்கட்கிழமை (16) துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

கல்முனை பற்றிமா கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கும் கன்னங்குடா ம.வி கல்வி பயிலும் ஒரு மாணவிக்குமாக நான்கு துவிச்சக்கர வண்டிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

தமது கல்வி நடவடிக்கைக்காக  தூர இடங்களிலிருந்து சிரமத்துடன் சென்று வந்த மாணவர்களை இனங்கண்டு அவ்வாறான மாணவர்களுக்கு மேற்படி துவிச் சக்கர வண்டிகள் இந் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  குடும்பங்கள்,  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் போன்றவற்றுக்கு  அவர்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்குடன் முனைப்பு சிறிலங்கா தொண்டு நிறுவனம் இவ்வாறான பல  உதவிகளை செய்துவருகின்றது.

கல்முனையில் இடம்பெற்ற இவ்வுதவியளிக்கும் நிகழ்வில், முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார், முனைப்பு சுவிஸ் கிளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.கிருபாகரன், கல்லூரி அதிபர் சண் தியாகு, உப அதிபர் எஸ்.ரவீந்திரகுமார், முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி, கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் வீ.கோகுலராஜன், பொருளாளர் கே.பத்திரண, நிருவாக உறுப்பினர் கே.கஜன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: