12 Mar 2020

முற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம்.

SHARE
முற்றாக முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை கம்பசில் வைத்து 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டுவருகின்றனர். இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் வியாழக்கிழமை (12) நிருவாக முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதனால் மாவட்டமே முற்றாக முடங்கியது.

குறிப்பாக தனியார் போரூந்துகள் சேவையில் ஈடுபடவில்லை, மாவட்டத்திலுள்ள தமிழ், மற்றும் முஸ்லிம் பகுதிகளிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படவில்லை, பொதுச்சந்தைகள் இயங்கவில்லை, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றிருந்தபோதும், மாணவர்களின் வரவு மிக மிகக் குறைவாகக் காணப்பட்டிருந்தன, இவற்றினைவிட வங்கிகளும் இயங்கவில்லை, அரச திணைக்கள காரியாலயங்கள் திறக்கப்பட்டிருந்தபோதும் பொதுமக்கள் சேவைகளைப் பெறுவதற்குச் சென்றவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். 

எனினும், ஒரு சில தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்துக்களும், அரச அரச போக்குவரத்து பேரூந்துகளும் சேவையிலீடுபடுத்தப் பட்டிருந்ததுடன் அவற்றில் பயணிகள் மிக மிகக் குiவானதாகவே காணப்பட்டிருந்தன.  

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை கம்பசில் வைத்து 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டுவருகின்றனர். இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கு எதிர்பபுத் தெரிவித்து வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றாக நிருவாக முடக்கல் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் செவ்வாய்க்கிழமை (10) அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.

எமது நாட்டு பிரஜைகள் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிக தேவை எல்லோருக்கும் உள்ளது. அதேவேளை தொற்று வேகமாக பரவி வரும் நாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது. எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இந்த நிலையில் ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுவிடும்  இந்த நிலை ஏற்பட்டால் நினைத்துகூட பார்க்க முடிய நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுவிடும்.

வெளிநாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி  வியாழக்கிழமை(12.03.2020)  மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பல எதிர்ப்புக்களையும் கடந்து வெற்றி பெற்றுள்ளது. சிலர் புதன்கிழமை(11) வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் நேரடியாகச் சென்று வியாழக்கிழமை கடைகளைத் திறக்கவேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர். அவ்வாறான எதிர்ப்புக்களையுமும் கடந்து மட்டக்களப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டி, எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளார்கள், எனவே இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இவ்விடையத்தில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: