11 Mar 2020

மட்டக்களப்பு மாநகரத்தை சிறுவர் சினேக மாநகரமாக மாற்றுகின்ற நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பு மாநகரத்தை சிறுவர் சினேக மாநகரமாக
மாற்றுகின்ற நடவடிக்கை.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வழிகாட்டலின் கீழ் அவருடைய ஆலோசனையுடன் யூனிசெப் மற்றும் சீரி நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகரத்தை சிறுவர் சினேக மாநகரமாக மாற்றுகின்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரத்தை முற்று முழுதாக சிறுவர் சினேகமான மாநகரமாக மாற்றி சிறுவர்கள் பாதுகாப்பாகவும் சிறுவர்கள் மன மகிழ்ச்சியோடும் வாழ கூடிய ஒரு மாநகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கையின் ஒரு கட்டமாக மாநகரத்தை அழகுபடுத்துகின்றன திட்டமாக இப்பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர முழுவதுமாக ஒரு அழகு நிறைந்த மாநகரமாக
முதல்வரின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப கட்டம்
புதன்கிழமை (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா, வீதி அபிவிருத்தி
அதிகார சபையின் மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.சசினந்தன், சீரி நிறுவனத்தின் இலங்கை நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் வி.இ தர்ஷன், சீரி
நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செல்வி.பவினா மோகன்ராஜ், யூனிசெப் நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி .எஸ் .சர்மிளா மாநகர சபை உறுப்பினர் அய்யாதுரை சிறிதரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: