1 Feb 2020

மட்.களுதாவளை மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலைச் சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படவில்லை.

SHARE
மட்.களுதாவளை மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலைச் சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படவில்லை.
மட்.களுதாவளை மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலைச் சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படவில்லை. என மாணவர்களின் பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற இலவச பாசாலைச் சீருடக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கு பெற்றோர் பாடசாலைத் துணிகளைக் கொள்வனவு செய்து சீருடைகளைத் தைத்துக் கொடுத்துள்ள போதிலும், இன்னும் எமது பிள்ளைகள் கல்வி கற்கும், மட்.களுதாவளை மத்திய மகாதவித்தியாயலம் தேசிய பாடசாலையில் புதிய சீருடைக்கான வவுச்சர் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே சமம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிரமெடுத்து மிகவிரைவில் தமது பிள்ளைகளுக்கான இலவச சீருடைக்கான வவுச்சரை மிகவிரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். 

இவ்விடையம் குறித்து பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது… களுதாவளை மத்திய மகாவித்தியாலயம் தற்போது தேசிய பாடசாலையாக்கப்பட்டுள்ளது, அது மத்தி அரசின் கீழ் உள்ள கல்வி அமைச்சின் கீழ் உள்ளது. அதற்கு அங்கிருந்துதான் நேரடியாக வரும். இருந்த போதிலும் அமைச்சுக்கு இதுபற்றி நாமும் அறிவித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

கிழக்குமாகாண கல்வி அமைச்சின் கீழ் இருந்த வந்த களுதாவளை மத்திய மகாவித்தியலயம் கடந்த வருடம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: