11 Feb 2020

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராயும் சந்திப்பு

SHARE

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராயும் வண்ணம் இன்று (11) காலை வைத்தியசாலை சமுகத்தினை முன்னாள் பிரதி அமைச்சரான கருணாம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.இச்சந்திப்பில் தாதியர் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்தவுடன் அதற்கான தீர்வினை பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசிமூலமாக தொடர்புகொண்டு உரிய நடவடிக்கையினை துரிதமாக செய்து தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் சிரேஸ்ட தாதிய போதனாசிரியர்கள் தற்போது நான்கு பேயர்கள் மாத்திரம் பணியாற்றி வருகின்றனர் இதனை நிவர்த்திசெய்வதற்கு வெளிமாவட்டத்தில் இருக்கின்ற உத்தியோகத்தர்கிளை தற்காலிகமாக நியமிக்கும்படியாக தாதியர் கல்லுரியின் அதிபர் A.M.T.B.அதிகாரி வேண்டுகொள்  விடுத்ததை அடுத்து அமைச்சின் செயலாளரி கவனத்திற்க்கு கொண்டுவந்தார் கருணாம்மான் அதணையும் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையில் பத்து தாதிய பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்ற விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்புளோமா கற்கைநெறியினை ஆரம்பிப்பதற்கான அடிப்படைவசதிகள் அற்ற நிலை பொளதீகவளங்களின் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சருடன் உரையாடி தீர்வு எட்டப்படவுள்ளதாக கருணாம்மான் தெரிவித்தார்

இன் நிகழ்வில் பொது ஜக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்குமாகான தலைவர் நா.சசிகரன் மற்றும் தாதிய கல்லுரி அதிபர் A.M.T.B.அதிகாரி மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்ட சார்ந்த  விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்புளோமா கற்கைநெறிக்கு தெரிவான தாதிய உத்தியோகத்ர்களும் கலந்து கொண்டனர் .




 
SHARE

Author: verified_user

0 Comments: