23 Feb 2020

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவுக்கான இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் தெரிவு.

SHARE
கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவுக்கான இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம்  தெரிவு.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு சனிக்கிழமை (22.02.2020) நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் நடைபெற்றன.

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் செயலகத்தில் இடம்பெற்றது.

இப்பிரதேசத்தில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன்,  3274 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

அந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவுக்கான இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம்  தெரிவானார்.

அவருக்கு  549 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன், 217 மேலதிக வாக்குகளுடன் அவர் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.

அஸீமை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களான ஹபீப் லெப்பை முஹம்மது ஆஸீக் 332 வாக்குகளையும், சேகு அப்துல் காதர் முஹம்மது அஸாம் 177 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்டுள் அஸீம் 2013ஆம் ஆண்டிலிருந்து காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தில் அங்கத்துவம் பெற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் தலைவராகவும், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தில் உப தலைவராகவும் கடமையாற்றியவர்.

மேலும் பிரதேச இளைஞர்களை உள்வாங்கி இளைஞர்கள் திறன் அபிவிருத்தி நிகழ்வுகளைத் தலைமைதாங்கி நடாத்தியுள்ளார்.

இன்னும்  ஆழனநட ருnவைநன யேவழைn நிகழ்வினூடாக தனது பிரதேச இளைஞர்கள் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகள் அதன் நடைமுறைகளை பற்றி அறிவதற்கு வித்திட்டு வழிநடாத்தியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புசநநn நுசய என்ற அமைப்பினை உருவாக்கி அதிமேதகு ஜனாதிபதியின் வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் தனது பிரதேசத்தில் சுவர் ஓவியங்களை வரைந்து பிரதேசத்தை அழகுபடுத்தியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு இளைஞர் நாடாளுமன்றத்தில் 356 பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர், சபாநாயகர், துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்படுவோருக்கு வழங்கப்பட்டு வருவது வழமையாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: