9 Feb 2020

எமது தமிழ்ப் பாரம்பரிய கலைகள் கிராமப்புறங்களில் இன்றும் உயிருடன் உள்ளது - கலாசார மேம்பாட்டு பொறுப்பாசிரியர் - குகநாதன்.

SHARE
எமது தமிழ்ப் பாரம்பரிய கலைகள் கிராமப்புறங்களில் இன்றும் உயிருடன் உள்ளது -  கலாசார மேம்பாட்டு பொறுப்பாசிரியர் - குகநாதன்.
எமது பாரம்பரிய கலை கலாசாரங்கள் அழிந்துவிடாது பாதுகாப்பதில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்களின் பங்கு அளப்பரியது, அதேபோன்று எமது தமிழ் பாரம்பரிய கலைகள் கிராமப்புறங்களில் இன்றும் உயிருடன் உள்ளது என கொல்லநுலை பாடசாலையின் கலாசார மேம்பாட்டு பொறுப்பாசிரியர் இ.குகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்புமேற்கு  கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயத்தில் “அல்லி அருச்சுனன் திருக்கல்யாணம்” எனும் கரகத்திற்கான சதங்கை அணியும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09.02.2020ம் திகதி) நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்…

இளம் கலைஞர்களைக் கொண்டு நாம் ஒரு நாட்டுக் கூத்தினை அல்லது கரகத்தினை அரங்கேற்ற வேண்டுமென்றால் அதற்கான பாத்திரமேற்கும்  கலைஞர்களை  நகரப்புறங்களில் நாம் தேடிப்பிடித்து பெறவேண்டிய நிலை உள்ளது, ஆனால் கிராமப்புறங்களில் அவ்வாறான நிலை இல்லை அதற்கேற்ப கலைஞர்கள் தாமாக முன்வந்து இணைந்து கொள்வார்கள். கலைகளில் ஆர்வமுடைய  அவ்வாறானோர்களால்தான் எமது கலைகளும் கலாசாரமும் இன்றும் உயிருடன் உள்ளது.

ஒரு கலைப்படைப்பினை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதானால் தற்காலத்தில் பல செலவுகளும், வளங்களும் தேவைப்படுகின்றன. ஆனால் நகரப்புறத்தையும் கிராமப்புறத்தையும் ஒப்பிடுகையில் கிராமப்புற மாணவர்கள் இதற்கு  ஈடுகொடுக்க முடியாத நிலையும் உள்ளது. இருந்தபோதிலும் அவர்களின் படைப்புக்களும் சாதனைகள் உயர்ந்த நிலையிலே உள்ளது என அவர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: