4 Feb 2020

இந்த நாட்டிலே 70 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன - இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி.

SHARE
இந்த நாட்டிலே 70 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன - இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி. 
என்னால் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. அது எவ்வாறெனில் காலத்திற்குக் காலம் வருகின்ற அரசாங்கங்களுடன் இனைந்த செயற்பட்டதனால்தான் அது என்னால் முடிந்தது. இல்லையேல் இவ்வாறான அபிவிருத்திகளை நினைத்துப்பார்த்திருக்க முடியாது. கட்சிபோதங்களுமின்றி எந்த கட்சி ஆட்சிக்குவந்தலும் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்த செயற்படுவதுதான் எமது நோக்கம். இருந்தபோதிலும் நாங்கள் அபிவிருதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்பட முடியாது. இந்த நாட்டிலே சுமார் 70 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைக்ள மறுக்கப்பட்டு வருகின்றன. அகிம்சை வழியில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியவர்கள்.

என இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைர் சேமசுந்தரம் கணேசமூர்தி தெரிவித்தார். இலங்கைத் தமிழர் முன்போக்கு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்றை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) அங்குரார்ப்பணம் செய்து வைத்து விட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

1956 ஆம் அண்டு பண்டா செல்வா ஒப்பற்தம் கைச்சாதிடப்பட்டது. பின்னர் அப்போதிருந்த சிங்களக் கட்சிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக 1957 ஆம்  ஆண்டு கிளித்தெறிப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டு  பூட்டான் நாட்டிலே திம்பு எனும் தலை நகரிலே ஒரு பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்தை முறிவடைந்து அப்பேச்சுவார்தையின் கருத்துக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அவைகளனைத்தும் தோல்வியிலேதான் முடிவடைந்துள்ளன. 

30 வருட யுத்ததினால் தமிழ் மக்கள கடந்து பாரியதுயரமும், உயிரிழப்பு,  பொருட்கள் இழப்புக்களும், அபிவிருதி, கல்வி, பொருளாதார இழப்புக்களுமேதான். இறுதியில் தமிழ் மக்கள் பெற்றது ஒன்றுமே இல்லை. 2002 ஆம் ஆண்டு நோர்வே ஒஸ்லோவிலே விடுதலைப் புலிகளுக்கும்,  அரசாங்கத்திங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் தோல்வியடைந்தது. இவ்வாறு பல தோவிகளை தமிழ் மக்கள் சந்தித்தவர்கள். 

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரையில் மைற்கல்லாக குறிப்பிடப்படக்கூடியது ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த 13 வது அரசியல் திருத்தச்சட்டம் மாகாணசகைகள் முறைமையாகும். அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்கள்கூட தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை. வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் அவர்களை அவர்கள் ஆளக்கூடிய முறைமை அதிலே இல்லை. மத்திய அரசியன் கட்டுப்பாட்டுக்குள்ளேதான் எல்லாம் அமைந்துள்ளது. எனவே 13 வது திருத்தச் சட்டத்திற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படவிலலை இது வேதனைக்குரிய விடையமாகும். 

இவ்வாறு மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட உரிமைகள்கூட பூரணமாக நிறைவேற்றப்படவில்லை. 13 திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட விடையங்களுடன் சேர்த்து இன்னும் சில விடையங்களையும் வழங்கினால் வடக்கு கிழக்கில் ஓரளவு நிருவாகத்தை முன்கொண்டு செல்லலாம். அதுகூட நிறைவேறவில்லை. இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சனைகள் இரக்கின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை மிக முக்கியமானதாகும். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக கடந்த அரசாங்கம் அரசியல் நிருணய சபை ஒன்றையும் நியமித்திருந்தது. அந்த சபை எடுத்து முயற்சிகள் அனைத்தும் தேல்வியிலே முடிந்தன. தமிழ் மக்கள் அரசியலில் தேல்வியைத்தான் அதிகம் சந்தித்துள்ளார்கள். அபிவிருதியை மாத்திரம் வைத்துக் கொண்டு செயற்பட முடியாது. 

ஓரு இனத்தினுடைய அரசியல் விடையத்தை பூர்த்தி செயயும்போதுதான் அவ்வினம் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றமடையும். எனவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும், பூரண அரசியல் பரவலாக்கல் வழங்கப்படவேண்டும். அதன்பின்னர்தான் நிறைவான அபிவிருதியைப் பெறலாம். தேசிய கட்சிகள் தமிழ் மக்களை காலத்திற்குக் காலம் ஏமாற்றி வந்துள்ளன. தமிழர்களிடையே ஒற்றுமை எற்பட்டால் நாங்க் எங்களுடைய உரிமைகளைப் பெறலாம்.

எனவே நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்ற கட்சி தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுதியம்பும். எமது கட்சி இலங்கை பூராகவும் செயற்படவுள்ளது. இது மாபெரும் அரசியல் சக்தியாக திகழும். இக்கட்சியினூடாக தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகளை முன்னெடுப்பதோடு, அபிவிருத்தி, இரண்மையும் மேற்கொள்ளும் என அவர இதன்பேது அவர் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: