1 Jan 2020

வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பினை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்.

SHARE
வறுமை நிலையிலுள்ள  மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பினை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வறுமையான மக்களுக்காக பணியாற்றும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது இந்த சந்தர்பத்தை நாம் அனைவரும் திறப்பட பயன்படுத்தி அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தில்  புதன்கிழமை (01.01.2020) நடைபெற்ற அரச சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி பெறும் நிகழ்வின் பின் உத்தியோகத்தர் மத்தியில்  உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு பிரசே செயலாளர் தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்காக பணியாற்றுவதற்காகவே மக்களின் வரிப்பணத்திலிருந்து  அரசாங்கம் நமக்கு சம்பளத்தை வழங்குகின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வருமானம் குறைந்த வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் எல்லேருக்கும் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கின்றது அதனை நாம்  ஏற்றத்தாழ்வு, பாகுபாடின்றி அனைவருக்கம்  சிறந்த சேவையினை வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நாம் திருப்தியாக செய்ய முடியாமல் போன அலுவலக காரியங்களையும், மக்களுக்கான சேவையினையும் பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டில் சரிவர திருப்தியாக செய்ய  வேண்டும். . எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில்,  தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து  சத்தியப் பிரமாண பெறும் நிகழ்வும் நடைபெற்றது.


SHARE

Author: verified_user

0 Comments: