9 Jan 2020

வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

SHARE
வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில்  அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக முறையில்  அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவது, காலபோட்டமடு பகுதியில் மண் அகழ்வு செய்யப்படும் இடத்திற்கான அனுமதிப் பத்திரம் இல்லாமல் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிபோது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த அப்புகாமியின் ஆலோசனைக்கேற்ப, உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.சஜித் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரையும்  குறித்த வாகனத்தையும்  வியாழக்கிழமை 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: