5 Jan 2020

இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானம்.

SHARE
இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானம். 
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனமும் ஏறாவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு வெள்ளிக்கிழமை (03.01.2020) ஏறாவூரில் அமையபெற்றுள்ள கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் மதிசுதன் பிரியங்கன் தலைமையில் நடைபெற்றது.

இச்சிரமதான நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் யு.ஹமீர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண காரியாலய  உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.எம்.நைரூஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  மட்டக்களப்பு மாவட்ட காரியாலய மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜேசுதாஸன் கலாராணி, ஏறாவூர் நகர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.டப்ளியு.இர்ஷாத் அலி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள்,  இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்கள் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலைய உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலல் இதன்போது பங்கேற்றிருந்தனர்.  

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு  பிந்திய நிலையை அடைந்து (late stageதங்களது வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாத  நோயாளர்களுக்கும், புற்று நோயின் ஆரம்ப நிலையில் சிகிச்சை  பெற்றுவரும் தூர  பிரதேச நோயாளர்கள் தற்காலிகமாக தங்கி தமது சிகிச்சைக்குரிய நேரத்தில் சென்று தமக்குரிய சிகிச்சையை   பெற்றுக் கொள்வதற்குமாக மட்டக்களப்பு  ஏறாவூர் பிரதேசத்தில் EASCCA HOSPICE  எனும் புற்றுநோயாளர்  பராமரிப்பு நிலையம் அமைய பெற்றுள்ளது. இந் நிலையமானது இன மத மொழி பேதங்களுக்கப்பால் இயங்கி வருகின்றது.

இங்கு அனுமதிக்கப்படும் எந்த நோயாளரிடமும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படாமல் முற்று முழுதாக இலவசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: