20 Jan 2020

கிழக்கின் பொங்கல் எழுச்சி விழாவினை முன்னிட்டு திக்கோடை அம்பாரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட நிகழ்வுகள்.

SHARE
(சுரவணையூர் தவா) 

கிழக்கின் பொங்கல் எழுச்சி விழாவினை முன்னிட்டு  திக்கோடை அம்பாரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட நிகழ்வுகள். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் தைப்பொங்கல் தின விசேட நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (19) கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியமும், கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி ஒன்றியமும், இணைந்து ஏறடபாடு செய்திருந்த கிழக்கின் பொங்கல் எழுச்சி விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நிக்கான், நெல்லி எனும் பவுண்டேஷன் நிறுவனத்தினரும், மற்றும் திக்கோடை பொது அமைப்புக்களின் ஒழுங்கமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. திக்கோடை கணேச வித்தியாலயத்தில் இருந்து பாரம்பரிய பண்பாட்டு, பவனி ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டு அம்பாரை பிள்ளையார் ஆலயத்திற்கு அதிதிகள் அழைத்துவரப்பட்டார்கள். 

அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வுகள், பூஜைகள் மற்றும் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சி.தணிகசீலனின் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கலாசார திணைக்கள  பணிப்பாளர் எஸ்.நவநீதன், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்  புவனேந்திரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்  பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது அப்பகுதியின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு அதிதிகளால் பரிசில்கழும் வழங்கி வைக்கப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: