26 Dec 2019

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சமூக அபிவிருத்தி சங்கங்களுக்கும், பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்.

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சமூக அபிவிருத்தி சங்கங்களுக்கும், பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்.

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் சமூக அபிவிருத்திச் சங்கங்கள், பொதுமக்கள், மற்றும், இளைஞர் யுவதிகக்குமான கலந்துரையாடல் ஒன்று பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது. 


இதன்போது பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார், மாவட்ட மகளிர் அணித் தலைவி எஸ்.காஞ்சனா, மண்முனை தென் எருவில் பற்று  இணைப்பாளர் கு.கணேசலிங்கம், தேற்றாத்தீவு பிரதேச குழு தலைவர்களான ஆர்.சிவகுமாரன், ஈ.இளஞ்செழியன், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர் யுவதிகள் என பலர் இதன்போத கலந்து கொண்டிருந்தனர். 


இதன்போது கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகள், இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புக்கள், சிறிய அளவிலான தொழிற்பேட்டை உருவாக்கம், உள்ளிட்ட பல திட்டங்கள் கலந்து கொண்டோர்களால் அமைப்பாளரிடம் முன்வைக்கப்பட்டு அத்திட்டங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில் முன்மொழியப்பட்டன.

பொதுஜன பெரமுனக் கட்சியினால்  சமூக அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக  நடைபெற்று வருவதாக அக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இணைப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களுக்கு எந்த உதவி தேவையானாலும் நேரடியாக எம்மிடம் வந்து கேட்டுக்கொள்ள முடியும். எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் ஆட்சிகாகலத்திலும், அவரது தலைமைத்துவத்திலும், லஞ்சமோ, ஊழலோ நடக்காது, என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் தொடர்ந்து மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றோம். தற்போது ஒரு கிராமத்திற்கு 20 இலெட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றினைவிட ஒரு பிரதேசத்திற்கு 300 இற்று மேற்பட்டவர்களுக்கு, தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். எனவே மக்கள் தொடர்ந்து எம்முடன் கைகோர்த்து பயணித்தால் இன்னும் மேலும் அபிவிருத்திகளை நாம் இட்டுச் செல்ல வாய்ப்பாக அமையும். என இதன்போது பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: