15 Dec 2019

புதிய ஆளுநர் பதிவியேற்ற மறுதினம் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் விஜயம் செய்து கள நிலைமைகளை அறிந்தார்.

SHARE

புதிய ஆளுநர் பதிவியேற்ற மறுதினம் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் விஜயம் செய்து கள நிலைமைகளை அறிந்தார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் பதவியேற்ற மறுதினமான வெள்ளிக்கிழமை 13.12.2019 மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு அலுவல் பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வெள்ளத்திற்குப் பின்னரான கள நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

முன்னதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்ததர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலவரங்கள் வெள்ள இடனிhல் உண்ணடான பாதிப்புக்கள், மாவட்டத்தின் அவசர தேவைகள் பற்றி அரசாங்க அதிபரால் புதிய ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதேவேளை ஆளுநர் அனுராதா யஹம்பத் சனிக்கிழமை (14.09.2011) அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்.

மாவட்ட மேலதிகச் செயலாளர் வி. ஜெகதீசன், தலைமையில் இடம்பெற்ற ஆளுநருடனான சந்திப்பில் பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிபவ்பாளர் எம். றியாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இங்கு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அண்மைய வெள்ள நிலைமை, காட்டு  யானைகளின் தொல்லை, உட்கட்டமைப்பு, உட்பட பொதுமக்களின் பல்வேறு தேவைகள் பிரச்சினைகள் தொடர்பிலும் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: