3 Dec 2019

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்ப்பின்றிஏகமனதாக நிறைவேற்றம்.

SHARE

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்ப்பின்றிஏகமனதாக நிறைவேற்றம்.போரதீவுப்பற்றுபிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகஅப்பிரதேச சபையின் தலைவர் யோகநாதன் ரஜினி தெரிவித்தார்


அடுத்தாண்டுக்கான போரதீவுப் பிரதேச சபையின் பாதீடு செவ்வாய்க்கிழமை (03.12.2019) சபையில்  சமர்ப்பிக்கப்பட்டது. பிரதேசசபைத் தலைவர் தலைமையில் பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளுந் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் சேர்ந்து அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பின்றி ஏகமனதாக பாதீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்

போரதீவுப்பற்றுப்பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 8 பேரும், ஐக்கிய தேசியக்கட்சி 3, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2, சுயேட்சைக் குழுக்கள் 2,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி 1, தமிழர் விடுதலைக் கூட்டணி 1 என மொத்தம் 18 பேர்உறுப்பினர்களாக உள்ளார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: