21 Nov 2019

பின்தங்கிய பிரதேசத்திலுள்ள முன்னபள்ளி பாடசாலை மாணவர்களுக்கு முன்பள்ளி பணியகத்தின் ஏற்பாட்டில் கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

SHARE
பின்தங்கிய பிரதேசத்திலுள்ள முன்னபள்ளி பாடசாலை மாணவர்களுக்கு முன்பள்ளி பணியகத்தின் ஏற்பாட்டில் கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால்   கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள முன்னபள்ளி பாடசாலை மாணவர்களுக்கு முன்பள்ளி பணியகத்தின் ஏற்பாட்டில் கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால்  இன்று  புதன்கிழமை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள பொன்னாங்கனித் தோட்டம் பாரதி முன்பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்வில், நெடுஞ்சேனை, அகம் முன்பள்ளி, பொன்னாங்கனித் தோட்டம் பாரதி முன்பள்ளி, இருநூறுவில் துர்க்கா முன்பள்ளி போன்ற பாடசாலைகளின் 23  மாணவர்களுக்கு இதன்போது பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை  கரடியனாறு மரியாள் முன்பள்ளி, பாலர்சேனை  கலைவாணி முன்பள்ளி, போன்ற பாடசாலைகளிலிருந்து 29 மாணவர்களுக்கும் இன்றையதினம்  பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது

இந் நிகழ்வில் மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளர்  ச.சசிகரன் ,  கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் செயளாளர்  ஐ. யசோதரன், மாவட்ட இணைப்பாளர் என்.ராகவன் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 2020 ம் ஆண்டில் முதலாம் தரம் கல்வி கற்கவுள்ள மாணவர்களுக்கு  கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.




SHARE

Author: verified_user

0 Comments: