24 Nov 2019

இந்த நாட்டை சுபீட்சமிக நாடாக மாற்றியமைப்பதற்கு பாடசாலைகளில் சமாதான, நல்லிணக்கம் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது - இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் தலைவர் த.வசந்தராசா.

SHARE
இந்த நாட்டை சுபீட்சமிக நாடாக மாற்றியமைப்பதற்கு பாடசாலைகளில் சமாதான, நல்லிணக்கம் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது - இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் தலைவர் த.வசந்தராசா.
உலகத்திலே நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கே இம்மண்ணிலே பிறந்தோம். எங்களுக்குள்ளே சந்தேகம், முரண்பாடுகள், இடம்பெறக்கூடாது. இனங்களுக்கிடையிலான பிளவுகளை சீர் செய்யவேண்டும். சிறுவர்களின் மனதில் தோன்றும் நல்ல விடயங்கள் சமூகத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும். சமாதான சகவாழ்வுகளை மாணவர்களுக்கு ஊட்டி விடுங்கள். இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் பிளவுகள் இல்லாத நாட்டை உருவாக்க முடியும். இந்த நாட்டிலே கோபம், குரோதம், மிலேசத்தனம் அதிகரித்து இனவாதம், மதவாதத்துடன் நாடு சீரழிந்துள்ளது. இந்த நாட்டை சுபீட்சமிக நாடாக மாற்றியமைப்பதற்கு பாடசாலைகளில் சமாதான, நல்லிணக்கம் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

பல்சமய மாணவர்களின்  இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்கில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக்கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்சமய மாணவர்களின் சகோதர சங்கம நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24)  மட்.தாழங்குடா ஸ்ரீ விநாயகர்  வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்நிகழ்விற்குத் தலைதாங்கி உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயம், தாளங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயங்களைச் சேர்ந்த இந்து, இஸ்லாம், மற்றும், கிறிஸ்த்தவ மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்ரோர், தொண்டர்ஙகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வசந்தராஜா மேலும் தெரிவிக்கையில்…

இப்பிரதேசத்தில் மூன்று சமயத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், போன்ற மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐக்கியத்துடனும், சமாதானத்துடனும் இனநல்லிணக்கத்துடன் கல்வி கற்று வருகின்றார்கள். நாம் அனைவரும் மொழியால் ஒன்று பட்டவர்கள். நாம் அனைவரும் கோபம், குரோதங்களை, மறந்து நாம் அனைவரும் இந்நாட்டு மாணவர்கள், மனிதர்களாக தொடர்ச்சியாக வாழ வேண்டும். சகோதர முஸ்லிம்களும், தமிழர்களும் பிட்டும் தேங்காய்பூவும் போன்று சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்பதுதான் உண்மையாகும். இவ்வாறு சமாதான, சகோதரத்துவதுன் வாழ்ந்தவர்கள். சில தீயசக்திகள்தான் இன்று இனங்களுக்கிடையில் இனவிரிசலை ஏற்படுத்தி முரண்பாடுகளுடன் இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இப்பிரதேசத்திலோ அல்லது மாவட்டத்திலோ மற்றும் நாட்டிலோ ஒன்று பட்ட சமூகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாம் அனைவரும் மனித நேயமுள்ள மனிதர்களாக திகழவேண்டும்.

தறபோதைக்கு தொலைக்காட்சி பார்த்தால் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால் தொலைகாட்சி நாடகங்கள் முடிவுறும் தறுவாயில் கவலையுடன் வெளியெறுகின்றோம். காரணம் தொலைகாட்சி நாடகங்கள் கோபம், குரோதம், மனிதநேயமற்ற இன முரண்பாடு, மனக்கிலேசங்களை தோற்றுவித்து மனங்களில் காயங்களுடன் வாழ்கின்றோம். ஆனால் சகோதர மாணவர்களுடன்,மனிதர்களிடம் அன்பாகவும், சமாதானமாகவும் வாழ்ந்தால் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதனால் மனிதர்களிடம் சகோதரத்துவமான நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இன்று நாம் பல்வேறு அனர்தங்களை சந்தித்துள்ளோம். வெள்ளம், வரட்சி, சுனாமி, பூகம்பம், சூறாவளி, கடல் கொந்தளிப்பு போன்ற அனர்த்தங்களை சந்தித்து உடல் உளரீதியான பாதிப்புகளை சந்தித்து அதிலிருந்து மீட்டெழுந்து வருகின்றோம். அதேபோன்றுதான் 30 வருடகால யுத்தத்தினால் பல இழப்புகளை சந்தித்து யுத்த வடுக்கல் இல்லாமல் மகிச்சியுடன் நிம்மதியாக சமாதானத்துடன் வாழ்கின்றோம்.

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல் நாட்டிலே இனங்களுக்கிடையிலும்,                                             மதங்களுக்கிடையிலும் பாரியதொரு அனர்த்தத்தை ஏற்படுத்தி மனித உறவுகள் பிளவுபட்டு பிறவுபட்டிருக்கின்றது. இன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு இவ்விடத்தில் கூடியிருக்கின்றோம். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஒன்று கூடியுள்ளோம். ஒவ்வொரு ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு சமாதானம், அன்பு, மகிழ்ச்சி, மனிதநேயம், சகோதரத்துவத்தை ஊட்டி பாடசாலை மட்டத்தில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். எதிர்காலத்தில் பாடசாலையில் நல்லிணக்கம் ஏற்பட்டால் சமூகத்தில் இந்த மாவட்டத்தில், மாகாணத்தில், நாட்டிலே நல்லிணக்கமாக வாழ முடியும். இதனை ஏற்படுத்திக் கொடுப்பதில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மும்முரமாக செயற்படுகின்றது.

உலகத்திலே நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கே இம்மண்ணிலே பிறந்தோம். எங்களுக்குள்ளே சந்தேகம், முரண்பாடுகள், இடம்பெறக்கூடாது. இனங்களுக்கிடையிலான பிளவுகளை சீர் செய்யவேண்டும். சிறுவர்களின் மனதில் தோன்றும் நல்ல விடயங்கள் சமூகத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும். சமாதான சகவாழ்வுகளை மாணவர்களுக்கு ஊட்டி விடுங்கள். இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் பிளவுகள் இல்லாத நாட்டை உருவாக்க முடியும். இந்த நாட்டிலே கோபம், குரோதம், மிலேசத்தனம் அதிகரித்து இனவாதம், மதவாதத்துடன் நாடு சீரழிந்துள்ளது. இந்த நாட்டை சுபீட்சமிக நாடாக மாற்றியமைப்பதற்கு பாடசாலைகளில் சமாதான, நல்லிணக்கம் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்குண்டு.
மக்களின் மனதில் ஏற்படுத்திய அச்ச உணர்வையும் பீதியையும் மக்களுக்கிடையிலான அவநம்பிக்கையையும் போக்கும் வகையில் சமூக சமய மட்ட சகவாழ்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சமூக, கலாசார பாரம்பரிய விழுமியங்களைப் பறைசாற்றுவதன் மூலமும் அவற்றை மதிப்பதன் மூலமும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதன் மூலமே இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கலைகளின் ஊடாக அவற்றை மதிப்பதனுடாக சமாதான ஐக்கியத்தை கட்டி வளர்க்கலாம் என்ற சிறியதொரு முயற்சி ஐக்கியத்தின் வித்தாக நாட்டப்பட்டிருக்கின்றது. இலங்கையில் ஏற்கெனவே இருந்தது போன்றும் தற்போது உள்ளது போன்றும் எதிர்காலத்திலும் இந்த நாட்டு மக்கள் இனங்களாக மதங்களாகப் பிரிந்து விடாமல் ஐக்கியகப்பட்ட சமூகமாக வளர்ச்சி காண்பதற்கும், சமாதமானத்தைக் தக்க வைத்து அதனைப் போஷக்குடன் வளர்ப்பதற்கும் நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம். 

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களும் அவற்றைப் பின்பற்றுகின்ற பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மதங்களையும் அவற்றின் கலாசார, பாரம்பரியங்களையும் பேணுவதின் அவசியத்தையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும். அவரவர் கலாசார வாழ்வியல் அம்சங்களிலே முரண்பட்டு நிற்பது அர்த்தமற்றது என்பதை எதிர்கால இளஞ்சந்ததிக்கு உணர்த்த வேண்டும். சமாதானம் ஐக்கியம் கலாசார வாழ்வு கிராம மட்டங்களில் வலுப்பெறும் போதுதான் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிரந்தரமாகக் கட்டிக் காக்க முடியும். இனம், மொழி, மதம் என்பதற்கு அப்பால் புரிந்துணர்வின் மூலம்  அன்பினால் இணைந்து கொள்ள முடியும். 

ஒருசமூகத்தின் கலாசார பாரம்பரியங்களை அயலவர்களாக வாழும் அடுத்த சமூகம் அறிந்து கொள்ளவேண்டும் அதனை மதிக்க வேண்டும். அதுதான் புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும். மதவெறி, மொழி வெறி, இன வெறி என்பது இந்த நாட்டின் சிறப்பான பாரம்பரியத்துக்கு உகந்ததல்ல என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எமது முயற்சியாகும் என அவர் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: