5 Nov 2019

அழகிய பல்லின கலாசாரத்தை எதிர்கால இளஞ் சமூகத்திற்குக் கையளிக்கவேண்டும். இலங்கை செஞ்சிலுவைச் சங்க சமூக ஆர்வலர் சக்திவேல்.

SHARE
அழகிய பல்லின கலாசாரத்தை எதிர்கால இளஞ் சமூகத்திற்குக் கையளிக்கவேண்டும். இலங்கை செஞ்சிலுவைச் சங்க சமூக ஆர்வலர் சக்திவேல்.
இலங்கையின் அழகிய பல்லின கலாசாரத்தை எதிர்கால இளஞ் சமூகத்திற்கு இன்னும் சிறப்பானதாக்கிக்கையளிக்க வேண்டும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாட்டாளரும்  சமூக ஆர்வலருமான வடிவேல் சக்திவேல் தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்கில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலாசார சகோதர சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். 

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட தலைமையக முன்றலில் கலாசாரசகோதர சங்கம நிகழ்வு அதன் தலைவர் ரீ. வசந்தராசா தலைமையில் திங்கட்கிழமை மாலை 04.11.2019 இடம்பெற்றது. அங்குகிராம மக்கள்,  பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், சிறார்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில்  தொடர்ந்து உரையாற்றிய சக்திவேல், சமீபத்திய ஏப்ரில் தற்கொலைத் தாக்குசுதல்  மக்களின்மனதில் ஏற்படுத்திய அச்ச உணர்வையும் பீதியையும் மக்களுக்கிடையிலான அவநம்பிக்கையையும்போக்கும் வகையில் சமூக சமய மட்ட சகவாழ்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். 

சமூககலாசார பாரம்பரிய விழுமியங்களைப் பறைசாற்றுவதன் மூலமும் அவற்றை மதிப்பதன் மூலமும் இனங்களுக்கிடையில்ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.இனங்களுக்கிடையில்ஒற்றுமையைப் பலப்படுத்துவதன் மூலமே இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.கலைகளின்ஊடாக அவற்றை மதிப்பதனுடாக சமாதான ஐக்கியத்தை கட்டி வளர்க்கலாம் என்ற சிறியதொருமுயற்சி ஐக்கியத்தின் வித்தாக நாட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில்ஏற்கெனவே இருந்தது போன்றும் தற்போது உள்ளது போன்றும் எதிர்காலத்திலும் இந்த நாட்டு மக்கள்இனங்களாக மதங்களாகப் பிரிந்து விடாமல் ஐக்கியகப்பட்ட சமூகமாக வளர்ச்சி காண்பதற்கும்சமாதமானத்தைக் தக்க வைத்து அதனைப் போஷ‪pத்துவளர்ப்பதற்கும் நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம். இந்தநாட்டில் வாழ்கின்ற சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களும் அவற்றைப் பின்பற்றுகின்ற பௌத்தஇந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களையும் அவற்றின் கலாசார பாரம்பரியங்களையும் பேணுவதின் அவசியத்தையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும் அவரவர்கலாசார வாழ்வியல் அம்சங்களிலே முரண்பட்டு நிற்பது அர்த்தமற்றது என்பதை எதிர்கால இளஞ்சந்ததிக்கு உணர்த்த வேண்டும். 

சமாதாணம்ஐக்கியம் கலாசார வாழ்வு கிராம மட்டங்களில் வலுப்பெறும்போதுதான் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும்நிரந்தரமாகக் கட்டிக் காக்க முடியும். இனம்மொழி. மதம் என்பதற்கு அப்பால் புரிந்துணர்வின் மூலம்  அன்பினால் இணைந்து கொள்ள முடியும். ஒருசமூகத்திஜன் கலாசார பாரம்பரியங்களை அயலவர்களாக வாழும் அடுத்த சமூகம் அறிந்து கொள்ளவேண்டும் அதனை மதிக்க வேண்டும். அதுதான் புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும்.மதவெறி.மொழி வெறி, இன வெறி என்பது இந்த நாட்டின் சிறப்பான பாரம்பரியத்துக்கு உகந்ததல்ல” என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எமது முயற்சியாகும்” என்றார்.இந்நிகழ்வில்இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராசா உட்படஅதன் அலுவலர்களும், தொண்டர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். 










SHARE

Author: verified_user

0 Comments: