16 Oct 2019

இலங்கையர் அனைவரும் முரண்பாட்டுடனேயே காலங்கழிக்கின்றனர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அடிகளார் வி.யோகேஸ்வரன்.

SHARE
இலங்கையர் அனைவரும் முரண்பாட்டுடனேயே காலங்கழிக்கின்றனர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அடிகளார் வி.யோகேஸ்வரன்.
முரண்பாடு என்பது இலங்கையர் எவருக்கும் புதிதல்ல, கடந்த 3 தசாப்த யுத்த காலத்திலும் தற்போதும் இலங்கையர் அனைவரும் முரண்பாட்டுடனேயே காலங்கழிக்கின்றனர் என மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அடிகளார் வி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
முரண்பாடுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் அவற்றின் விளைவுகளும் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் சமயத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் நிலயத்தில் அபினாம் (யுPஐNயுஆ) அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர் சிவஸ்ரீ வி.கே. சிவபாலன் குருக்கள் தலைமையில் அதன் இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீது இணைப்பாக்கத்தில் புதன்கிழமை 16.10.2019 இந்நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி யோகேஸ்வரன், இலங்கையர்கள் முரண்பாடுகளின் தாக்கத்தலிருந்து விடுபட முடியாதா என்ற கேள்வி இப்பொழுது இலங்கையர் அனைவரிடமும் எழுந்துள்ளது.

ஆகையினால் இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதி இதுபற்றி நாம் ஆற அமரச் சிந்திக்க வேண்டும்.

முரண்பாடுகளை உடன்பாடுகளாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அழிவுகளைத் தடுத்து நிறுத்தக் கூடியதாகவும் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது பற்;றிச் சிந்திக்கத் துவங்கினாலே முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும்  கட்டத்திற்கு நாம் செல்லலாம்.

முதலில் தனக்குள் உள்ள முரண்பாடுகளிலிருந்து விடுபட வழி தேட வேண்டும். புத்த பெருமானும் இதைத்தான் போதித்தார். எனவே இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பெரும்பான்மைச் சமூகமும் முரண்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டும்.

முரண்பாடுகளின் அனுபவங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.

70 சதவீதமான பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு 8 சதவீதமான முஸ்லிம் மக்களாலேயோ அல்லது 12 சதவீதமான தமிழ் மக்களாலேயோ பேராபத்து வரப்போகின்றது என்ற பீதி உருவாக்கப்பட்டுள்ளது. இது புரிந்து கொள்ள முடியாத பீதியாகும்.

அதுபோலத்தான் 2050இல் இந்த பௌத்த நாடு முஸ்லிம் நாடாக மாறப்போகின்றது என்பது ஒரு ஆபத்து நிறைந்த பீதியாகவே பரப்படுகின்றது.

இருப்புக்கு ஆபத்து எனும் தப்பான பீதியால் நாடே அல்லோலகல்லோலப்பட்டு நிற்கின்றது.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தாலும்  முஸ்லிம்களின் பொருளாதாரத்தாலும் இந்த நாட்டு பெரும்பான்மைக்கு ஆபத்து என்ற சிந்தனையில் இருந்து கொண்டு எவ்வாறு இந்த நாட்டை அமைதியில் வைத்திருக்க முடியும்? இந்த நாட்டின் வளங்களும் தனது சமூகத்திற்கு இல்லாமல் போய் விடலாம் என்ற பீதியும் அவர்களைப்  பதற்றப்பட வைக்கின்றது.

பல குழப்பங்கள் நிறைந்ததாக இந்த நாட்டு மக்கள் நகர்த்தப்படுகின்றார்கள். இதற்குப பல பின்னணிகள் உள்ளன.

ஆகவே, இந்த குழப்பமான சிந்தனையோட்டத்தில் இருந்து விடுபட நீண்ட நெடுங்காலமாக முரண்பாட்டில் சிக்கியுள்ள நாம் ஆற அமரச் சிந்தித்து ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்தாக வேண்டும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: