7 Oct 2019

ஈஸ்டன் இன்டநெசனல் கல்லூரியின் ஆரம்ப வகுப்பு மாணவர்களது பட்டமளிப்பு நிகழ்வு.

SHARE
ஈஸ்டன் இன்டநெசனல் கல்லூரியின் ஆரம்ப வகுப்பு மாணவர்களது பட்டமளிப்பு நிகழ்வு. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக, நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் கற்பித்தல் மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளை முன்னெடுத்து ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினருக்கான தயார்படுத்தலை வெற்றியுடன் முன்கொண்டு செல்லும் தனித்துவம் மிக்க ஒரு தளமாக கிழக்கிலங்கை சர்வதேச பாடசாலை எனுப்படும் ஈஸ்டன் இன்டெர்நெசனல் ஸ்கூல் மிளிர்கின்றது.

குறித்த கல்லூரியின் தயார்படுத்தல் மற்றும் ஏனைய ஊக்கச் செயற்பாடுகள் அனைத்துமே ஒரு சர்வதேச சவால் மிக்க பயணத்தை இலகுவில் கடந்து விடுகின்ற திறனையும் தெம்பினையும் மாணவச் செல்வங்களுக்கு இயல்பிலேயே ஊட்டும் விதமாக அமைந்திருப்பதே கல்லூரியின் வெற்றிப் பயணத்திற்கும், பெற்றோரின் நன்மதிப்பிற்கும் ஏதுவாக நிற்கிறது.
அந்த வகையில் ஈஸ்டன் இன்டநெசனல் கல்லூரியின் ஆரம்ப வகுப்பு மாணவர்களது பட்டமளிப்பு நிகழ்வு சனிக்கிழமை (05) கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர் தனுஜா மௌலானா தலைமையில் இடம்பெற்றது,

மாணவர்களது கலை அம்சங்களை வெளிப்படுத்த தக்கதாக அமைந்த குறித்த நிகழ்வில் மாவட்டத்தின் முக்கியஸ்த்தர்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குறித்து தமது பாராட்டுக்களை தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்,

குறித்த கல்லூரியில் ஆரம்ப வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதுடன் ஜனவரி 6 இல் இருந்து கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 






SHARE

Author: verified_user

0 Comments: