22 Oct 2019

இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மக்கள் முன்னிலை வகிக்க முடியும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன.

SHARE
இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மக்கள் முன்னிலை வகிக்க முடியும்.
தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன.

இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மக்கள் முன்னிலை வகிக்க முடியும் என தேசிய சமாதானப் பேரவை நம்புவதாக அப்பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு  வரும் “இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் கருத்திட்டம் தொடர்பாக அவர் விவரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 22.10.2019 மேலும் விவரம் வெளியிட்ட அவர்,

இலங்கை தேசிய சமாதானப் பேரவை இனமுறுகலையும் அமைதியின்மையையும் தணிப்பதற்காகவும் நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்ட மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்கள் ஊடாக பரந்துபட்ட பணிகளைச் செய்து வருகின்றது.

அந்த வகையில் இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையும் தன்னாலான பங்களிப்பை ஆற்றமுடியும் என இலங்கை தேசிய சமாதானப் பேரவை எதிர்பார்க்கின்றது.

இனவாத, மதவாத தீவிரவாத செயற்பாடுகளினால் உண்டான மனக்காயங்கள் (வுசயரஅய) நாட்டு மக்களிடையே இன்னமும் வலிகளாக உள்ளன.

இவற்றை ஆய்ந்துணர்ந்து குணப்படுத்தாவிட்டால் நிலைமை வர வர மோசமடையும்.

எனவே, மதவாதத்தால், இனவாதத்தால், தீவிரவாதத்தால் பேசுவதை விட நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்றுபட்டு இதயக் கதவைத் திறந்து மனங்களால் பேச வேண்டும்.

அதுதான் இந்த நாட்டின் விமோசனத்துக்கு வழிவகுக்குமேயன்றி மதவாதமும் இனவாதமும் தீவிரவாதமும் இந்த நாட்டை அடியோடு அழிக்கும் என்பதை அனைவரும் நின்று நிதானித்து உற்றுக் கவனித்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகள், பிரதான சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத் தலைவர்கள், மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தில் உள்ள மத நல்லிணக்கத்ளத பாதிக்கும் சிக்கல்களை அளடயாளம் கண்டு இதனூடாக அரச நிருவாகத் தரப்பினரும் சிவில் சமூக ஈடுபாட்டாளர்களும் இணைந்து அமைதிக்கான வழிமுறைகளை வகுக்க முடியும்,

சமூக மாற்றிகளாக செயல்படக்கூடிய திறன் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லின செயற்பாட்hளர்கள் நடைமுறையில் பரஸ்பர பின்னிப் பிணைந்த இன ஐக்கியத்தை உயிரூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

தொடரும் காலம் தேர்தலுக்கான காலம் என்பதினால் அது பல்வேறு பிளவுகளுக்கும் விரிசல்களுக்கும் வழிவகுக்கும்.

எனவே, நல்லிணக்கச் செயற்பாட்டாளர்கள் குழப்பவாதிகளை முந்திக் கொண்டு நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் சாதனை படைக்க வேண்டும்” என்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: