23 Oct 2019

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வேண்டி களுவாஞ்சிகுடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வருகை.

SHARE
கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வேண்டி களுவாஞ்சிகுடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வருகை.
நடைபெறவுள்ள இலங்கையின் 7 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்குபற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வு இன்றைய தினம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றது.

இதன்போது பட்டிருப்பு, களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை போன்ற இடங்களுக்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ களுதாவனை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








 




SHARE

Author: verified_user

0 Comments: