30 Oct 2019

மட்டக்களப்பு மாவட்ட கலாசாரஅதிகாரசபையின் புதியநிர்வாக சபை அமைக்கப்பட்டது.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரஅதிகாரசபையின் புதியநிர்வாக சபை அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரஅதிகாரசபையின் புதியநிர்வாகசபையினை இன்றுதெரிவுசெய்யும் கூட்டம் புதன்கிழமை (30) மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபம் கூட்டத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் பிரதேசசெயலாளர்கள் உதவிபிரதேச செயலாளர்கள் இஸ்லாமியகலாசார உத்தியோகத்தர் செயினுஸ் ஆப்தின் மற்றுகலாசாரதிணைக்களத்தின் உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.

அரசாங்கஅதிபர் மா.உதயகுமார் உரையாற்றுகையில் இருந்த மாவட்டமானது பல் இன கலாச்சாரத்திணை கொண்ட மாவட்டமாகும்.  அந்தவகையில் நல்லதொரு கலாசார விழுமியங்களுக்கூடாக நல்லினக்கத்தினை கட்டியெலுப்பும் வகையில் இந்த மாவட்ட கலாசார சபை ஆக்கப்பட்டு சிறந்த கலாசார சமூகத்தினை கட்டியெலுப்புதல் வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

இன்று புதிதாகதெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது மூன்று ஆண்டுகள் கால ஆயுளைக் கொண்டிருக்கும் இதன் நிறைவேற்று பணிப்பாளர் சபையின் தலைவராக பதவிவழியாக அரசாங்க அதிபர் இருப்பதுடன் உபதலைவராக ச.கனேசமூர்த்தியும் செயலாளராக வை.லோகிதராஜாவும் பொருளாளராக ந.துஜோகாந் ஆகியோர் ஏகமனதாக எவ்வித போட்டியும் இன்றி மாவட்ட கலாசார அதிகாரசபையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

முன்பு இருந்தகலாசார அதிகாரசபையானது 2016 ஆம் ஆண்டு தெரிவானது அச்சபையானது காலாவதியானதை அடுத்து இன்று புதியநிர்வாக சபையினை உருவாக்கி சிறப்பான கலாசார சேவையினை வழங்குவதற்கு ஏதுவான உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: