10 Oct 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து முதலாவது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவு தினம் அனுஸ்ட்டிப்பு.

SHARE
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து முதலாவது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவு தினம் அனுஸ்ட்டிப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து பெண் போராளியாகவிருந்து முதலாவது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவுதநினம் வியாழக்கிழமை (10) மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்றது. 

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் காரியாலயத்தில், அக்கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.கோணோஸ்வரன், மற்றும் அதன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எஸ்.கோகிலன், உள்ளிட்ட பலரும் இதன்போது பலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஈகைச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றி வைக்க மலர்மாலையை எஸ்.கோணோஸ்வரன் அணிவித்தார். தொடர்ந்து கலந்து கொண்டோர் மலரஞ்சரி செலுத்தியதுடன், நினைவுரைகளும் இம்பெற்றன. 2 ஆம் லெப். மாலதி 10.10.1987 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: