26 Sept 2019

ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ்மக்களை வாழவைப்பதற்குரிய அத்தனை நடவடிக்கை எடுப்போம் எனத் தமிழ் இலட்சிய முன்னணியின் தலைவர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்தார்.

SHARE
ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ்மக்களை வாழவைப்பதற்குரிய அத்தனை நடவடிக்கை எடுப்போம் எனத் தமிழ் இலட்சிய முன்னணியின் தலைவர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இலட்சிய தேசிய முன்னணியின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு வொய்ஸ் ஓப் மீடியா நிலையத்தில் புதன்கிழமை(25) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

வடகிழக்கு, மலையகம் உட்பட அனைத்து தமிழ்மக்களினதும் ஆணையை பெற்று ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி தமிழ்மக்களின் ஒற்றுமை,தனித்துவதுடன் வாழ வைப்பதற்கே நாங்கள் இன்று இலட்சிய முன்னணியை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்.

நாங்கள் தமிழ்தேசிய கோட்பாடுடன் வடக்கு,கிழக்கு, மலையகம் மண்ணில் செயற்படுவோம்.எதிர்வரும் காலங்களில் நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்யமாட்டோம்.இனியும் செய்யமாட்டோம். தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சனை, பொருளாதாரப்பிரச்சனை போன்றவற்றில் எப்போதும் கவனத்தில் இருப்போம்.

தமிழ்தேசிய அரசியல் தலைமைகள் தமிழ்மக்களுக்கு செய்யாத அத்தனை பிரச்சனைகளையும் ஏற்றுக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்தும் தமிழ்மக்களின் விடிவுக்காகவும்,அவர்களின் வாழ்வுக்காகவும் மும்முரமாக உழைப்போம். தமிழ் தேசியம் என்று பேசிக்கொண்டு வாக்கு வங்கிகளை நிரம்பிக்கொள்ளும் தமிழ்த்தலைமைகள் இன்னும் தமிழ்மக்கள் பற்றி சிந்தித்து கொள்ளவில்லை.

தீவிரவாதத்தையோ அல்லது பயங்கரவாதத்தையோ ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் எங்கள் இலட்சிய முன்னணியில் உள்ள 16,000 இளைஞர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இரும்புக்கம்பிகள் போன்று செயற்படுவோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ்மக்களை வாழவைப்பதற்குரிய அத்தனை நடவடிக்கை எடுப்போம்.

கடந்த 30வருடகால யுத்தத்தினால் இழந்தது கொஞ்சம் அல்ல. இழந்தவைகள் ஏராளம். இன்னும் தமிழ்மக்கள் இழக்கத் தயாரில்லை. இன்னும் தமிழ் மக்களின் வளர்ச்சி காணாத சமூகமாகும்.இன்று முதல் தமிழ்மக்களின் வளர்ச்சிப்பாதை இலட்சிய விடுதலை முன்னணியுடன் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனத்தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: