18 Sept 2019

கிழக்கு, மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் விழிப்புனர்வுக் கூட்டம்.

SHARE
கிழக்கு, மாகாண புவிசரிதவியல் அளவீடுமற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் செவ்வாய்கிழமை (17) மட்டக்களப்பு ஈஸ்ட்லக்குன்விடுதியில் விழிப்புனர்வுக் கூட்டம் நடைபெற்றது. 
ந்த விழிப்புனர்வு கூட்டத்தில் புவிச்சரிவியல்அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர். அசேல இடவெல, கிழக்குமாகாண பிரதமசெயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவந்தன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்உதயகுமார் திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார் மற்றும் அம்பாறை மேலதிகஅரசாங்க அதிபர் வி.ஜகதீசன் மூன்று மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்கள் மட்டக்களப்பு பிரதிபொலிஸ்மாஅதிபர் தம்மிக்க தயானந்த திருகோணமலை பிரதிபொலிஸ்மா அதிபரபி.ஆர்.எஸ்.நர்கர்போலமற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், மாவட்டசெயலக உத்தியோகஸ்த்தர்களும் கலந்துகொண்டனர். கடந்த ஏப்ரல் தாக்குதல்களுக்கு பாவிக்கப்பட்டசில வெடிமருந்துகள் தொடர்பில் ஆராயப்பட்டது. வர்தக நோக்கில் வெடிமருந்துகளை வழங்குவதில்புதிய சட்ட நடவடிக்கைகளை தெரிவு படுத்தப்பட்டது அவ்வாறு வழங்கப்படும் வெடிபொருள்களுக்கானஅனுமதியை வழங்கும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் சட்ட திருத்தங்களில் காணப்பட்டுள்ளவிடையங்களும் ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

வெடி மருந்துகளுக்காக வழங்கப்படும்அனுமதிப்பத்திரம் ஆகவும் கூடிய காலமாக ஒரு வருடமாக வரையறுக்கப்பட்டிருக்கும் இது போன்றுமணல், கல்மலைகள் உடைத்தல் கிறவல் போன்றவற்றிக்கும் ஒருவருடமாகமட்டுபடுத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தனர். புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள்பணியகத்திற்கு அரசாங்க அதிபர்கள் பிரதேசசெயலாளர்கள் சூழல் பாதுகாப்பு அதிகார சபைபொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் போன்றோர்கள் எமது திணைக்கலத்திற்குபங்களிப்பு செய்துள்ளனர். 

கடல் கணியங்கள் பாதுகாப்பது மற்றும்வெடிபொருட்கள் பாவனை தொடர்பான விளக்கங்களை பொறியலாளர் எம்.ஆர்.எம்.பாரீஸ் வழங்கினார். 












SHARE

Author: verified_user

0 Comments: