27 Sept 2019

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது. 240 மில்லியன் அபிவிருத்தியின் முன்னேற்றம் ஆராயப்பட்டது.

SHARE
களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது. 240 மில்லியன் அபிவிருத்தியின் முன்னேற்றம் ஆராயப்பட்டது.
மண்முணை தென்எருவில் பற்று - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்கான  பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர்அலி, மற்றும் உபதலைவர் ஜ.தே.க பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் தேசிய கடதாசி கூட்டுத்தாபன தலைவருமான எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாண்டுக்கு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், வடமாகண அபிவிருத்தி மீள்குடியேற்ற மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அங்கீகாரத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 240 மில்லியன் ரூபாய் நிதியில்  இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் 265அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆராயப்பட்டதுடன் நடைமுறைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களை துரிதமாக அமுல்ப்படுத்துவதற்கும் தேவையான விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும்  கல்வி, கலாசாரம், சமூர்த்தி, விவசாயம், கால்நடை அபிவிருத்தி,எவீதி அபிருத்தி, மீன்பிடி அபிருத்தி, வீடமைப்பு, அரசாங்கத்தின் முக்கிய அபிருத்தி திட்டங்களான கம்பெரலிய ஊரக எழுச்சி, சுகித புரவர, மீள்குடியேற்றம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கிராம சக்தி திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.

இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள், உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: