28 Jul 2019

நான் கடந்த காலத்தில் ஆளும் கட்சியில் இருந்தபோது அபிவிருத்திகளை அப்போது எம்மால் மேற்கொள்ள முடியவில்லை – சாணக்கியன்

SHARE
நான் கடந்த காலத்தில் ஆளும் கட்சியில் இருந்தபோது அபிவிருத்திகளை அப்போது எம்மால் மேற்கொள்ள முடியவில்லை – சாணக்கியன்.
சில அரசியல்வாதிகள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அடிக்கல் நட்டுவிட்டுப்போவார்கள் ஆனால் அபிவிருத்திகள் நடைபெறாது. நான் கடந்த காலத்தில் ஆளும் கட்சியில் இருந்தேன் அவ்வாறு இருந்தாலும் இவ்வாறான அபிவிருத்திகளை அப்போது எம்மால் மேற்கொள்ள முடியவில்லை.


என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் நிதி ஒதுக்கீட்டில் களுதாவளை 4 ஆம் பிரிவில் வேள்ட்விஷன் வீதிக்கு கம்பெரலிய திட்டத்தின் கீழ் கொங்றீட் இட்டு புணரமைப்புச் செய்யும் பணி சனிக்கிழமை(27) ஆரம்பித்து வைப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் பிரதிநிதியாக கலந்து கொண்டு இந்த அபிவிருத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்…. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

சில அரசியல்வாதிகள் அபிவிருத்தித்திட்டங்களுக்கு, அடிக்கல் நட்டுவிட்டுப்போவார்கள் ஆனால் அபிவிருத்திகள் நடைபெறாது. நான் கடந்த காலத்தில் ஆளும் கட்சியில் இருந்தேன் அவ்வாறு இருந்தாலும் இவ்வாறான அபிவிருத்திகளை அப்போது எம்மால் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 லெட்சம் ரூபா பெறுமதியில் ஒரு கிராமத்திலே பல அபிவிருத்திகளை செய்கின்றார் என்றால் அது பெரிய விடையமாகும். கடந்த காலத்தில் நாங்களும் சில அபிவிருத்திகளைச் செய்யலாம் என நினைத்துக் கொண்டு ஆளும் கட்சியில் இணைந்திருந்தோம், ஆனால் எம்மால் எதுவித அபிவிருத்திகளையும் செய்யமுடியாமல் போய்விட்டது. அதற்குரிய சந்தர்ப்பங்களும் எமக்கு அவர்கள் வழங்கவில்லை. அவர்களிடம் நாங்கள் உதவித்திட்டங்களை கேட்டபோது எமக்கு ஒரு லெட்சம், இரண்டு லெட்சம் ரூபாவுக்குரிய செயற்றிட்டங்களை தந்துவிட்டு ஏனைய சகோர இனைத்திற்கு 10 லெட்சம், 15 லெட்சம் ரூபா திட்டங்களை வழங்கிவிடுவார்கள் இதனால்தான் நாங்கள் அந்த பேரினவாதக் கட்சியை விட்டு விட்டு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியில் இணைந்துகொண்டு செயற்பட்டு வருகின்றேன்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் மாவட்டம் பூராகவும், பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் பட்டிருப்புத் தொகுதியில் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதிததுவம் இல்லை என்பதற்கு அப்பால் அவர் இந்த பகுதியில் பல அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். இதற்காகவேண்டி எமது மக்கள் நன்றியுடைவரார்களாக இருக்கவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.  

இந்நிழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், மற்றும், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: