7 Jul 2019

சமாதான செயற்பாட்டாளர்களான தமிழ் முஸ்லிம் சிங்கள ஆர்லர்களுக்கு “வன்முறையற்ற பிரயோக தொடர்பாடல் பயிற்சி நெறி”

SHARE
சமாதான செயற்பாட்டாளர்களான தமிழ் முஸ்லிம் சிங்கள ஆர்லர்களுக்கு “வன்முறையற்ற பிரயோக தொடர்பாடல் பயிற்சி நெறி”
தேசிய சமாதானப் பேரவையின் “மோதல் மாற்றத்திற்கான பல் நிலைக் கூட்டு நடவடிக்கைகளைப் பலப்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் கீழ் “வன்முறையற்ற பிரயோக தொடர்பாடல் பயிற்சி நெறி” கண்டி லேவெல்ல பற்றிமா தியான இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 5-7) வரை இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தேசிய சமாதானப் பேரவையின் சமாதான செயற்பாட்டாளர்களான தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களையும் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்களான சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்பாடல் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த விமர்ஷ‪னா ரணசிங்ஹ, ரமனுஷா பூபாலரெட்ணம், தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர்  சமன் செனவிரட்ன சிரேஷ்ட திட்ட அதிகாரி சாந்த பத்திரன, திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம்  ஆகியோருட்பட இன்னும் சில துறைசார்ந்த வளவாளர்களும் பயிற்சி நெறிகளை வழங்கினர்.








SHARE

Author: verified_user

0 Comments: